For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘நானும், மோடியும் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறியவர்கள்...’ ரேடியோ உரையில் ஒபாமா!

Google Oneindia Tamil News

டெல்லி : பிரதமர் மோடியுடனான தனது ரேடியோ உரையில், ‘தாங்கள் இருவரும் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறியதை' நினைவு கூர்ந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

நாட்டின் 66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் சுற்று பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிரதமர் மோடியுடன் இணைந்து, ஒபாமா பங்கேற்ற ‘மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி நேற்று அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது.

சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பபட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் உரையாற்றினார்.

As it happened: 'Mann ki Baat' with Modi and Obama

நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, " ரேடியோ மூலம் மக்களுடன் பேசுவது பெருமையாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்த பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளோம்.

இந்தியாவில் மோடியின் பணிகளை பார்த்து அமெரிக்க மக்கள் பெருமைப்படுகின்றனர். எனது குழந்தைகள் இந்தியாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா வரவும் அவர்கள் ஆசைப்படுகின்றனர். இந்தியாவின் பெருமைப்பற்றி எனது குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன். ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பின்னர் எனது குழந்தைகளுடன் இந்தியா வருவேன்.

தொற்று நோய் பிரச்னை பற்றி மோடியுடன் பேசினேன். பொதுவான பிரச்சினைகள் பற்றி நானும்மோடியும் பேசினோம். நானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து முன்னேறியுள்ளோம். நாட்டு மக்கள் மீது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நம்பிக்கை "

இவ்வாறு ஒபாமா கூறினார்.

English summary
Hours after US President Barack Obama left India after a historic visit, during which he was the chief guest at the Republic Day parade and held summit meetings, a joint radio address by Prime Minister Narendra Modi and Mr Obama was broadcast yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X