பாஸ்வானுக்கு ஒரு சிக்கல்.. மகள் வடிவில்!
Recommended Video

டெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது அவரது மகள் வடிவில். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் 2019 லோக்சபா தேர்தலில் பாஸ்வானுக்கு எதிராக அவரது மகள் ஆஷா பாஸ்வான் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆஷா பாஸ்வானுக்கு லாலு கட்சி சீட் கொடுத்தால் நிச்சயம் அவரை பாஸ்வானுக்கு எதிராக களம் இறக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஸ்வான் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார். பாஸ்வானின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் ஆஷா.

இதுகுறித்து ஆஷாவின் கணவர் அனில் சாது கூறுகையில், பாஸ்வானுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அவர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பாஸ்வான் தனது மகன் சிராக் பாஸ்வானுக்கு ஆதரவாகவே இருக்கிறார். அவருக்குத்தான் கடந்த லோக்சபா தேர்தலில் சீட் கொடுத்தார். கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் ஆக்கினார். இதை கட்சியினர் விரும்பவில்லை.
மேலும் தனது முதல் திருமணம் மூலம் பிறந்த மகள்களை அவர் புறக்கணித்து வருகிறார். அவர்களை மதிப்பதில்லை, கண்டு கொள்வதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் பாஸ்வானையும், அவரது மகனையும் எதிர்த்துப் போட்டியிட நானும் எனது மனைவியும் தயாராகவே உள்ளோம். லாலு பிரசாத் யாதவும், தேஜஸ்வி யாதவும் (லாலு மகன்) சீட் கொடுத்தால் நிச்சயம் போட்டியிடுவோம் என்றார் சாது.
பாஸ்வான் தற்போது ஹாஜிப்பூர் தொகுதி எம்பியாக உள்ளார். அவரது மகன் சிராக் பாஸ்வான் சமுய் தொகுதி உறுப்பினர் ஆவார். பாஸ்வானின் தம்பி ராமச்சந்திர பாஸ்வான் சமஷ்டிபூர் தொகுதி எம்.பியாக இருக்கிறார். பாஸ்வானின் இன்னொரு தம்பியான பசுபதி குமார் பரஸ், நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்.
பாஸ்வானுக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள். அதில் 2வது மகள்தான் ஆஷா.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications