ஹிமந்தா பிஸ்வா சர்மா-வுக்கு 48% ஆதரவு!! ஆக்ஸிஸ் மை இந்தியா அசாம் எக்சிட் போல் முடிவுகள் அதிரடி
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கௌரவ் கோகாய் இடையேயான தலைமைப் போட்டியாகவே உள்ளது. ஹிமந்தா சர்மா தனது ஆட்சியின் செயல்பாடுகளையும், மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாகைக் முன்வைத்து மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறார்.
மறுபுறம், கௌரவ் கோகாய் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை, புதுமைகளை செய்து ஆட்சியை பிடிக்க கடுமையாக போட்டிப்போ்டு வருகிறது. இந்த நிலையில் அசாமின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஆக்ஸிஸ் மை இந்தியா எக்சிஸ் போல் கணிப்புகள் வந்துள்ளது.

Axis My India நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த எக்ஸிட் போல், என்டிஏ கூட்டணி கூட்டணிக்கு 48% வாக்கு பங்கீடு, காங்கிர்ஸ் கூட்டணி கூட்டணிக்கு 38% மற்றும் மற்றவர்களுக்கு 14% வாக்குகள் பதிவாகும் என்று தெரிவிக்கிறது.
பாலின வாரியாக பார்க்கும்போது, ஆண் வாக்காளர்களிடையே என்டிஏ கூட்டணி கூட்டணிக்கு 46% (+3), காங்கிர்ஸ் கூட்டணி கூட்டணிக்கு 39% (+5), மற்றவர்கள் 15% (-8) என்று உள்ளது. பெண் வாக்காளர்களிடையே என்டிஏ கூட்டணி 50% (+1), காங்கிர்ஸ் கூட்டணி 37% (+7), மற்றவர்கள் 13% (-8) வாக்குகள் குவியும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி சற்று முன்னிலை வகிக்கிறது. இதில் () உள்ளே எண்கள் ஸ்விக் அளவீடுகள் அதாவது மாற்றும் ஏற்படும் வாய்ப்பு கொண்ட அளவீடு.
சாதி வாரியாக பிரித்துப் பார்த்தால், பழங்குடியினர் பிரிவினர் (16% வாக்கு வங்கி) இடையே என்டிஏ கூட்டணி 56% (+3), காங்கிர்ஸ் கூட்டணி 20% (+5), மற்றவர்கள் 24% (-8). பட்டியல் சாதியினர் (8%) இடையே என்டிஏ கூட்டணி அபாரமாக 71% (+3 வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டு உள்ளகு, இதைதொடர்ந்து காங்கிர்ஸ் கூட்டணி 18% (+2). OBC பிரிவினர் (32%) இடையே என்டிஏ கூட்டணி 64% (+1), காங்கிர்ஸ் கூட்டணி 25% (+4).
முஸ்லிம் வாக்காளர்கள் (29%) இடையே காங்கிர்ஸ் கூட்டணி 78% (+12) என்று பெரும் ஆதரவைத் தந்துள்ளனர், என்டிஏ கூட்டணி வெறும் 5% (-3) மட்டுமே பெற்றுள்ளது. ஜெனரல் பிரிவினர் (15%) இடையே என்டிஏ கூட்டணி 73% (+5) என்று மிக உயர்ந்த ஆதரவு கிடைத்துள்ளது.
வயது வாரியாக பார்க்கும்போது,
முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது - 2%) என்டிஏ கூட்டணிக்கு 43% (+3), காங்கிர்ஸ் கூட்டணிக்கு 41% (+5).
20-29 வயதினர் (24%) இடையே என்டிஏ கூட்டணி 44% (+3), காங்கிர்ஸ் கூட்டணி 43% (+5).
30-39 வயதினர் (27%) இடையே என்டிஏ கூட்டணி 49% (+4), காங்கிர்ஸ் கூட்டணி 35% (+4).
40-49 வயதினர் (21%) என்டிஏ கூட்டணி 51% (+2). காங்கிர்ஸ் கூட்டணி 37% (+5).
50-59 வயதினர் (14%) என்டிஏ கூட்டணி 50% (NC), காங்கிர்ஸ் கூட்டணி 35% (+4).
60 வயது மற்றும் அதற்கு மேல் (12%) என்டிஏ கூட்டணி 51% (+3), காங்கிர்ஸ் கூட்டணி 39% (+7) என்று என்டிஏ கூட்டணி பெரும்பாலான வயது பிரிவுகளில் முன்னிலை வகிக்கிறது.
முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, மக்களின் பதில் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஹிமந்தா பிஸ்வா சர்மா 48% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். கௌரவ் கோகோய் 32% ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்பானந்த் சோனோவால் 2%, ஹக்ராமா மோஹிலாரி 1%, அகில் கோகோய் 3%, பட்ருதீன் அஜ்மல் 2%, பிரமோத் போரோ 3%, CONG இலிருந்து யாரேனும் 3%, மற்றவர்கள் 6% என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த எக்ஸிட் பொல் முடிவுகள் அஸ்ஸாமின் அரசியல் களத்தை மீண்டும் என்டிஏ கூட்டணி ஆதிக்கத்திற்கு கொண்டு வருவதாகக் காட்டுகின்றன. பெண்கள், பல்வேறு சாதி பிரிவுகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பலரும் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
குறிப்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதான மக்களின் நம்பிக்கை 48% என்ற உயர்வில் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும் போது இந்த எக்ஸிட் பொல் எவ்வளவு துல்லியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications