பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்.. பேராபத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்கங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அஸ்ஸாமில் பிரமபுத்திராவில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் காசிரங்கா சரணாலய வனவிலங்குகள் பேராபத்தை எதிர்கொண்டுள்ளன.

அஸ்ஸாமில் வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலியாகிவிட்டனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Assam Flood: Kaziranga National Park animals in danger

மக்களைப் போல வனவிலங்குகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் அரிய வகை ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் அஸ்ஸாமின் காசிரங்க சரணாலயத்தில் மட்டுமே இருகின்றன. பிரமபுரத்திரா நதியில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் காண்டாமிருகங்களின் வாழ்விடங்களை மூழ்கடித்துள்ளது.

இதனால் மேடான பகுதிகளைத் தேடி தேடி இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றன காண்டா மிருகங்கள். காசிரங்கா வனப்பகுதியில் இருந்த யானைகளோ கர்பி மலைப் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயருகின்றன.

இதேபோல் காட்டெருமைகள், மான்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் பெரு மழையும் வெள்ளமும் நீடிப்பதால் மனிதர்களைப் போல விலங்குகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Floods in Assam have also inundated the Kaziranga National Park with efforts underway to help the animals.
Please Wait while comments are loading...