அசாமில் பெய்யும் பேய் மழை! நீரில் மூழ்கிய 1000 கிராமங்கள்.. பலர் உயிரிழந்ததால் பீதியில் பொதுமக்கள்
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில மக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாகவே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு
இந்த அதிதீவிர கனமழை காரணமாக அம்மாநில மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளம் தொடர்பாகவும் மீட்புப் பணிகள் தொடர்பாகவும் சமீபத்தில் தான் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விமானம் படை விமானங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

4 லட்சம் மக்கள்
இந்த வெள்ளம் காரணமாக 26 மாவட்டங்களில் மொத்தம் 4.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் நிலச்சரிவுகள் அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் பகுதிகளை அரித்துவிட்டது. அதேபோல பராக் பள்ளத்தாக்கிலும் சாலை மற்றும் ரயில் இணைப்பைப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.

8 பேர் பலி
இந்த வெள்ளம் காரணமாக 26 மாவட்டங்களில் உள்ள 1,089க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்பு அங்குத் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் வெள்ளத்திலும் 5 பேர் நிலச்சரிவு காரணமாகவும் பலியாகி உள்ளனர். இவர்களைத் தவிர 5 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.

மீட்புப் பணிகள்
ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 3,427 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 250க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் மொத்தம் 39,558 பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

நதிகள்
கம்பூர் மற்றும் தரம்துல் ஆகிய இடங்களில் கோபிலி நதியும், நங்லாமுரகாட்டில் திசாங் நதியும், ஆந்திர காட் பகுதியில் பராக் நதியும், கரீம்கஞ்சில் குஷியாரா நதியும் அபாய அளவைத் தாண்டி உள்ளது. வரும் நாட்களில் கனமழை மேலும் மோசமாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

எச்சரிக்கை
இப்பகுதியில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை முதல் நிலைமை சற்றே மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications