For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகாவின் பெயரால் சமஸ்கிருத திணிப்பு- தாய்மொழியையே பலி கொடுத்த அஸ்ஸாம் கிராமத்தின் துயரம்!

Google Oneindia Tamil News

குவஹாத்தி: இந்தியாவிலேயே சமஸ்கிருதம் மட்டுமே பேசக் கூடிய ஒரே ஒரு கிராமம் என்பது அஸ்ஸாமின் பாட்டியாலாவுக்கு பெருமை என்பது மேலோட்டமான பார்வை. 5 ஆண்டுகளால் யோகா சொல்லிக் கொடுக்க வந்த ஒரு அமைப்புதான் இப்படி சமஸ்கிருதத்தை திணித்து சமஸ்கிருதமயமாக்கி வைத்திருக்கிறது என்பது முன்னெச்சரிக்கை என சுட்டிக்காட்டுகின்றனர் மொழியிலலாளர்கள்.

இந்தியாவில் செத்துப் போய்விட்ட மொழிகளில் சமஸ்கிருதம் பிரதானமானது. சமஸ்கிருதத்தை இந்தியாவில் பேசுகின்றவர்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான். ஆனால் பல நூறு கோடி ரூபாய், இந்த செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு செலவழிக்கிறது மத்திய அரசு.

தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு.. பாஜக கனவு ஒருபோதும் நிறைவேறாது.. வைகோ ஆவேசம்! தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு.. பாஜக கனவு ஒருபோதும் நிறைவேறாது.. வைகோ ஆவேசம்!

சமஸ்கிருத திணிப்பு

சமஸ்கிருத திணிப்பு

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சமஸ்கிருத திணிப்பை இடைவிடாது செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு வழக்கொழிந்த சமஸ்கிருதத்தின் பெயரை சூட்டிப் பூரிப்படைகிறது மத்திய பாஜக அரசு.

சமஸ்கிருத கிராமம்

சமஸ்கிருத கிராமம்

இந்த நிலையில்தான் இந்தியாவிலேயே சமஸ்கிருதம் மட்டுமே பேசக் கூடிய ஒரே ஒரு கிராமம் என்பது அஸ்ஸாமின் பாட்டியாலாவுக்கு பெருமை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையால் பாட்டியாலாவுக்கு கிடைப்பது பெருமை அல்ல.. அந்த கிராமத்துக்கு நேர்ந்த பெருங்கொடுமை என்கின்றனர் மொழியிலலாளர்கள்.

தாய்மொழி பலி கொடுத்து சமஸ்கிருதம்

தாய்மொழி பலி கொடுத்து சமஸ்கிருதம்

இது குறித்து மொழியியல் வல்லுநர்கள் கூறுகையில், மொழி பேசுதல் பெருமை என்பது நீண்ட நெடுங்காலமாக சமஸ்கிருதம் பேசுகின்றனர் எனில் மகிழலாம். ஆனால் திட்டமிட்டு கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட செயற்கையான ஒன்று என அதிர்ச்சி தருகின்றனர். ஆம்.. சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரதபாரி தொகுதிக்குட்பட்ட இந்த பாட்டியாலா கிராமத்துக்கு யோகா கற்றுத் தருகிறோம் என ஒரு கோஷ்டி நுழைந்திருக்கிறது. யோகாவை சமஸ்கிருதத்தில் சொல்லித் தர தொடங்கி இருக்கின்றனர். மெல்ல மெல்ல அந்த கிராம மக்களின் தாய்மொழியை அழித்து இப்போது ஒட்டு மொத்த கிராமத்தையும் சமஸ்கிருதம் பேச வைத்திருக்கின்றனர். தங்களது தாய்மொழியை பலி கொடுத்துவிட்டு செத்த மொழிக்கு மகுடம் சூட்டி மகிழ்கின்றனர் அந்த அப்பாவிகள் என சுட்டிக்காட்டுகின்றனர்.

திணிப்புகள் எதிர்ப்பு ஏன்?

திணிப்புகள் எதிர்ப்பு ஏன்?

மேலும், இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என்பவை எல்லாம் ஒரு இனத்தின் மொழி, கலாசாரம் உள்ளிட்ட அத்தனையையும் எப்படி செரித்து தனதாக்கிக் கொள்ளும் என்பதற்கு இதனைவிட மிக நல்ல உதாரணத்தை நாம் பார்த்துவிட முடியாது. ஆகையால்தான் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் திணிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கின்றன எனவும் கூறுகின்றனர் மொழியியல் வல்லுநர்கள்.

English summary
A story on India's Sanskrit-speaking village in Assam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X