For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கு .. நாளை மறு நாள் தேர்தல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா : மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உளள்து.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.. இதில் முதல் கட்டமாக புர்லியா, பாங்குரா, ஜார்கிராம், புர்பா, மெதினாபூர், பஸ்சிம் மெதினாபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் க்குப்பதிவு நடைபெற போகிறது இதையடுத்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.

Assembly Elections 2021: 30 Constituencies In West Bengal, 47 In Assam Set To Go For Phase 1 Polling On march 27

தேர்தல் நடைபெற்ற 30 தொகுதிகளும் பழங்குடி மக்கள் அதிக அளவு வசிக்கும் தொகுதிகள் ஆகும். இங்கு உள்ள லோக்சபா தொகுதிகளில் பாஜக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் எப்படியும் சட்டமன்ற தேர்தலிலும் வெல்லும் முனைப்பில் பாஜக செயல்படுகிறது.

அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 12 மாவட்டங்களில் 47 தொகுதிகளுக்கு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.

47 தொகுதிகளல் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 264 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பார்ச்சல்லா, தேஜ்பூர், பிஸ்வநாத், கும்தாய், ரங்கபாரா, நசிரா, மரியானி, கோலாகாட் உள்பட 47 தொகுதிகளுக்கு அஸ்ஸாமில் தேர்தல் நாளை மறுதினம்(மார்ச் 27) நடைபெறுகிறது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

English summary
Assembly Elections 2021: On Saturday, states of West Bengal and Assam will go for first phase polling. In West Bengal, electorates will exercise their franchise in as many as 30 constituencies, while Assam will go for polls on 47 seats in the first phase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X