For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: ஹரியானாவில் 76%, மகாராஷ்டிராவில் 64% வாக்குப் பதிவு!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை/ சண்டிகர்: சட்டசபை தேர்தலில் ஹரியானாவில் 76%, மகாராஷ்டிராவில் 64% வாக்குகள் பதிவாகின. ஹரியானாவில் சில இடங்களில் வாக்குப் பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 4 ஆயிரத்து 119 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏறத்தாழ எட்டரை கோடி வாக்காளர்களை கொண்ட இம்மாநிலத்தில் பிற்பகல் வரை மந்தமான வாக்குப்பதிவு இருந்தது.

Assembly elections: High turnout in Haryana, Maharashtra records 64 per cent

பிற்பகலில் வாக்குப்பதிவு அதிகரித்தபோதிலும் மாலை 6 மணிவரை மொத்தம் 64% வாக்குகள் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 76% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இம்மாநிலத்தில் சில இடங்களில் வாக்குச் சாவடியை கைப்பற்றுவதற்கான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

English summary
After remaining sluggish for the most part of the day, voting gathered pace in Maharashtra in the afternoon, with the polling percentage crossing 63.4% by 6pm. Haryana, on the other hand, registered an record-breaking turnout figure, with the polling percentage reaching all-time high of 75.9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X