வழக்கை திசை திருப்புகின்றனர்... சிபிஐ விசாரணை வேண்டும்: படான் சிறுமிகளின் குடும்பத்தார் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இரண்டு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் உத்திரப்பிரதேச அரசு திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவர்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

Badaun Case: Girl's Family Demands CBI Probe, Says No Faith in UP Government

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சரியாக நடவடிக்கை எடுக்காத இரு போலீஸ்காரர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிறுமிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அம்மாநில டி.ஜி.பி. ஆனந்த் லால் பானர்ஜி, ‘சிறுமிகளில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், சொத்துத் தகராறு காரணமாகக் கூட இக்கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

டி.ஜி.பி.யின் இந்தக் கருத்துக்கு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திரப்பிரதேச அரசு மீதான நம்பகத்தன்மை போய் விட்டதாகவும், வழக்கை திசை திருப்பும் நடவடிக்கைகளில் மாநில போலீசார் ஈடுப்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இக்கொலையின் பின்னணியில் சொத்துப் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மைகள் அனைத்தும் வெளிவரும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+