ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர்கள் 5 பேர் பலி... அதிர்ச்சித் தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த 5 பேர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து, சிரியாவில் போரிட்டு உயிரிழந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ரகசியமாகச் சென்று, சிரியா, ஈராக் நாடுகளில் நடைபெறும் போரில், அந்த அமைப்பின் சார்பாகப் போரிடுவதாகக் கூறப்படுகிறது.

'Bahrain circle' case: Five from Kerala killed in ISIS' Syria territory

அதன்படி, கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளை சேர்ந்த 5 இளைஞர்களை காணவில்லை என்று, சமீபத்தில் தகவல் வெளியானது. இவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தியதில், பஹ்ரைன் வழியாக, சிரியா சென்ற இந்த 5 பேரும், ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் சண்டையிட்டதில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.

இதனிடையே, ஐஎஸ் அமைப்பில் சேர முயன்ற, 350 கேரள இளைஞர்களை, 'ஆப்ரேஷன் பீஜியன்' என்னும் திட்டத்தின் கீழ், உளவுத் துறை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையால், மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில், கண்ணுார், மலப்புரம், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 350 பேர், தீவிரவாத அமைப்பில் சேருவது தடுக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
'Bahrain circle' case: Five from Kerala killed in ISIS' Syria territory
Please Wait while comments are loading...