பட்டத்திருவிழா: பட்டையை கிளப்பிய பாகுபலி பட்டங்கள்
புனே: மகா சங்கராந்தியை ஒட்டி வட மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புனே உட்பட பல்வேறு நகரங்களிலும் நரேந்திர மோடி, பாகுபலியின் போஸ்டர் கொண்ட பட்ட பட்டங்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை வடமாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர். மகர சங்கராந்தி என்ற பெயரில் இவ்விழாவை,பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.
பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழா கொண்டாடப்படும். நரேந்திர மோடி, பாகுபலி, பேட் மேன், ஆங்கிரிபேட், ஸ்பைடர் மேன் பட்டங்களும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

பட்டத் திருவிழா
மகர சங்கராந்தியை முன்னிட்டு மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும், விதவிதமான பட்டங்களைப் பறக்க விடுவர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் நாட்டின் சின்னம், கலாச்சாரம், நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தும் படங்கள் அச்சிட்ட பட்டங்களைப் பறக்க விடுவது சிறப்பம்சமாகும்.
|
பாகுபலி காய்ச்சல்
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படங்களின் வரிசையில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள திரைப்படம் பாகுபலி. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் உச்சம் தொட்ட இந்தப் படம் தென் இந்தியாவைத் தாண்டியும் வெற்றிக் கொடி நாட்டியது. குறிப்பாக வட மாநிலங்களிலும் பாகுபலி காய்ச்சல் தீவிரமாகவே அடித்தது.

மகரசங்கராந்தி
தற்போது மகர சங்கராந்தியை ஒட்டி அங்கு பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் புனே உட்பட பல்வேறு நகரங்களிலும் பாகுபலியின் போஸ்டர் கொண்ட பட்டங்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.
|
பாகுபலி பட்டம்
இந்த பட்டங்களை வாங்கும் பாகுபலி ரசிகர்கள் தங்கள் மொட்டை மாடியில் நின்றபடி செல்பியாக எடுத்து ட்விட்டரில் அப்லோட் செய்ய, இதைப் பார்த்து உற்சாகமாக பாகுபலி நாயகன் பிரபாஸ் ட்விட்டரில் இந்த புகைப்படங்களை ரீ ட்வீட் செய்து வருகிறார்.

மோடி பட்டம்
இதேபோல நரேந்திர மோடி பட்டம், பேட்மேன், ஆங்கிரி பேட், ஸ்பைடர் மேன் பட்டங்களும் அதிக அளவில் விற்பனையானது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications