இனியும் சுப்ரீம் கோர்ட்டை காண்பித்து தப்பிக்க முடியாது.. வசமாக சிக்கிக்கொண்டது மத்திய அரசு!
டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வழங்காது என தெரிந்துவிட்டது. எனவே, இப்போது பந்து பாஜக 'கோர்ட்டில்' விழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கூறிவந்தார்.

தீர்ப்பு சாதகமாக வந்துவிடும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை வரை கூறி வந்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு தீர்ப்பு வழங்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். விரைந்து தீர்ப்பு வழங்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கைவிடுத்ததற்கு நீதிபதிகள் இவ்வாறு இன்று பதில் அளித்துள்ளனர்.
தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜல்லிக்கட்டு நடத்தலாம், பாதகமாக வந்தால் நீதிமன்ற தீர்ப்பை காரணம் காண்பித்து தப்பிவிடலாம் என மத்திய அரசும், தமிழகத்து பாஜகவினரும் திட்டமிட்டிருந்தனர். ஏனெனில் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் கூட இதேபோன்ற ஆட்டத்தை ஆடி அவர்கள் எளிதாக தப்பிவிட்டனர்.
ஆனால், இம்முறை நீதிமன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வழங்காது என தெரிந்துவிட்டது. எனவே, இப்போது பந்து பாஜக 'கோர்ட்டில்' விழுந்துள்ளது. இனியும் அவர்கள் தப்பியோட முடியாது. அவசர சட்டம் பிறப்பித்தே ஆக வேண்டும். ஏனெனில் ஜல்லிக்கட்டு நடத்ததான் சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க தடையில்லை. இப்படி அவசர சட்டம் கொண்டுவராவிட்டால், பாஜக மக்களின் கோபத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும்.
அதேநேரம் தமிழக அரசு எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்ததியே தீருவோம் என அறிவித்துள்ளது. இந்த வார்த்தையில் அது உறுதியாக இருக்குமா, அல்லது, மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications