For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் மாநகராட்சிக்கு ஆக. 22ல் வாக்குப்பதிவு! 25-ம் தேதி ரிசல்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் பெருநகர் மாநகராட்சிக்கு (பிபிஎம்பி) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22ம் தேதி வாக்குப்பதிவும், 25ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

பெங்களூர் மாநகராட்சிக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கால், தேர்தல் தள்ளிப்போனது.

Bangalore corporation election on August 22

இந்நிலையில், தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. வேட்புமனு தாக்கல் 10ம் தேதி ஆரம்பிக்கிறது. 11ம் தேதி வேட்புமனு பரிசீலனை தொடங்கும். 13ம் தேதி, வேட்புமனுவை வாபஸ் வாங்க கடைசி நாள்.

22ம் தேதி வாக்குப்பதிவும், 25ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அவசியப்படும் வார்டுகளில் 24ம் தேதி, மறு வாக்குப்பதிவு நடைபெறும். ஆகஸ்ட் 26ம் தேதியோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்படும்.

English summary
Bangalore corporation election's new date is August 22. counting on August 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X