Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க நகைகளுடன் மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. மகளை விட அழகா இருப்பாராம்.. 1 வாரத்தில் கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்திரப் பிரதேசத்தில் மணப்பெண் குடும்பமும், மணமகன் குடும்பமும் உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளனர்.. இது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டுள்ள நிலையில், போலீசாரும் போன்களை டிரேஸ் செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும், சம்பவத்தின் அதிர்ச்சியும், பரபரப்பும் இரு குடும்பத்தினரிடமும் அடங்கவில்லை. திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், குடும்பத்தினர் மிகுந்த டென்ஷனில் இருக்கிறார்களாம். என்ன நடந்தது?

2 வருடங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு வினோத திருமணம் இணையத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பர்ஹல்கஞ்ச் மாவட்டம் சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ்.. இவருக்கு 70 வயதாகிறது.

Gold Jewellery Mother in law Uttar pradesh

தன்னுடைய மகனுக்கு பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கணவர் இறந்துவிட்டார்.. இதனால், கணவரின் மரணத்திற்குப் பிறகு பூஜா வேறொரு இடத்திற்குச் செல்ல முடிவு செய்தார்.
விநோத திருமணம்

அந்த நேரத்தில்தான், கைலாஷுக்கு பூஜா மீது காதல் வந்தது. தன்னுடைய காதலை மருமகள் பூஜாவிடம் சொல்லவே அவரும் இதை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, 28 வயது பூஜாவை, 70 வயது மாமனார் திருமணம் செய்து கொண்டார். வயது வித்தியாசம், சமுதாயத் தடைகளைத் தகர்த்தெறிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்தத் திருமணம் தொடர்பாக யாரும் போலீஸ் அல்லது நிர்வாக மட்டத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.. தன்னை விட 42 வயது இளையவரான பூஜாவை அவர் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், இதே உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த மற்றொரு சம்பவம், சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்தனர்..

ஒரு வாரத்தில் திருமணம்

இறுதியில் ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் தேடி வந்தது.. இதனால் மாப்பிள்ளையை நேரில் சந்தித்து பேசினார்கள்.. இரு வீட்டாரும் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர். வருகிற 16-ந்தேதி மணமக்களுக்கு திருமணம் செய்ய நிச்சயமும் செய்துள்ளனர். இதற்கான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்..

திருமண வரவேற்பு, கல்யாணம் தொடர்பாக, வருங்கால மாப்பிள்ளை அடிக்கடி பொண்ணு வீட்டுக்கு வந்து சென்றார்.. இதனால், மணமகளின் அம்மாவுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.. மணமகளை விட அவரது அம்மா அழகாக இருப்பாராம்.. இதனால் அவரது அழகில் மாப்பிள்ளை மயங்கியிருக்கிறார்.. பிறகு தன்னுடைய வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கி தந்துள்ளார்..

மருமகனுடன் போனில் அரட்டை

புது செல்போன் கைக்கு வந்ததுமே, மருமகன் - மாமியார் 2 பேரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்து வந்துள்ளனர்.. பிறகு, இந்த நட்பு திடீரென காதலாக மாறியது. மணப்பெண்ணின் அம்மா, வருங்கால மருமகனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுகுறித்து கேட்டபோதெல்லாம், கல்யாண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசி வருவதாக இருவருமே அவரவர் வீட்டில் சொல்லி சமாளித்தார்கள்.

ஒருகட்டத்தில் மாமியார் - மருமகன் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படியே நேற்றைய தினம், வருங்கால மருமகனுடன் கிளம்பி சென்றுவிட்டார் மாமியார்.. திருமணத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மகளுக்காக கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்துக்கொண்டு மருமகனுடன் ஓட்டம் பிடித்தார்.

செல்போன்கள் ஆய்வு

ஆனால், பத்திரிகை வழங்குவதற்காக தாய் வெளியே சென்றிருப்பதாக அனைவரும் நினைத்தனர்.. இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால், சந்தேகம் அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அதிலிருந்த நகை, பணம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு மணமகனின் வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர்.. அங்கே மணமகனும் இல்லை.. 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன.. இதனால் 2 தரப்பிலும் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் மகளுக்கு கல்யாணம் உள்ள நிலையில், வருங்கால மருமகனுடன் மாமியார் ஓடிப்போனது, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+