மே. வங்க மக்களுக்கு மாற்றம் தேவை... பாஜக அந்த மாற்றமாக இருக்கும்... பிரதமர் மோடி பேச்சு
கொல்கத்தா: மேற்கு வங்க மக்கள் மாற்றம் வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார்கள் என்றும் பாஜக அந்த மாற்றமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கா பிரச்சாரத்தை அம்மாநிலத்திலுள்ள முக்கிய கட்சிகளும் அனைத்தும் தொடங்கிவிட்டன. குறிப்பாக, பாஜக இத்தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், பிரமதர் நரேந்திர மோடி ஒரே மாத்தில் இரண்டாவது முறையாக இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இத்தனை ஆண்டுகளாக மேற்கு வங்கம் தனித்து விடப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் பொதுமக்கள் மாற்றம் வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். அந்த மாற்றமாக பாஜக இருக்கும். இவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) வரை மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது" என்றார்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்க மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதியைச் செய்து தர மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முழுமையாக திரிணாமுல் அரசு செலவழிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரதமர், குடிநீர் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் வங்கத்தின் மகள்கள் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தையும் திரிணாமுல் அரசு தடுத்து நிறுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால், தொழிற்துறை மிகப் பெரியளவில் வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்,
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications