For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அணைகளில் தண்ணீர் காலி.. பெங்களூரில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு! மக்கள் அவதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு அதல பாதாளத்துக்கு போய்விட்டதால், தலைநகர் பெங்களூரில் தினசரி 2 மணி நேரம் அதிகாரப்பூர்வமாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளில் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகமாக உள்ளது.

சமீபத்தில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் மின்வெட்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா கூறியது: கர்நாடக மின்தேவை நாளொன்றுக்கு 10,188 மெகாவாட். சப்ளை அலவு 6600 முதல் 7300 மெகாவாட்டாக உள்ளது. 3 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக பற்றாக்குறை உள்ளது.

Bengalore will face 2-hr power cuts every day

1500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்க மத்திய அரசை கேட்டுள்ளோம். அண்டை மாநிலங்களிடமிருந்தும் மின்கொள்முதல் செய்ய உள்ளோம். எதுவும் பலன் அளிக்காவிட்டால் மின்வெட்டை தவிர்க்க முடியாது. கர்நாடகாவில் மின் பற்றாக்குறை எழுவதற்கு, அணைக்கட்டுகளில் நீர் இல்லாமல் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதே காரணம். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.

தலைநகர் பெங்களூரில் 2 மணி நேரங்களும், பிற மாவட்ட தலைநகரங்களில் 4 மணி நேரங்களிலும், கிராமங்களில் ஆறு முதல் எட்டு மணி நேரங்களும் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. காலை 1 மணிநேரம், இரவு 1 மணி நேரம் என்ற வீதத்தில் பெங்களூரில் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்.

English summary
As Karnataka reels under drought, the cabinet on Monday decided to impose scheduled power cuts, from two to eight hours on a rotational basis across the state, possibly from next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X