'சிலிக்கான் வேலி'யின் 'சிக்கன் வேலி'... தமிழக சாப்ட்வேர் இன்ஜினியர்களின் 2வது வீடு 'கோரமங்களா'!
பெங்களூரு: தமிழகத்தில் இருந்து வந்து பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக வேலை பார்க்கும் பலருக்கும் இந்த நகரிலுள்ள கோரமங்களாதான் தாய் வீடாக மாறியுள்ளது. இதற்கு காரணம் தமிழ் நாட்டு சுவையுடன் கூடிய ஹோட்டல்கள் பலவும் இங்கு குவிந்திருப்பதுதான்.
இந்தியாவின் சிலிக்கான்வேலி என்று புகழப்படுவது பெங்களூரு நகரம். இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்திருப்பதால் பெங்களூருவுக்கு இந்த பெயர் வந்துள்ளது.

தமிழக இளைஞர்கள் அதிகம்
பெங்களூரு நகரில் கிடைக்கும் வேலைவாய்ப்புக்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பெங்களூரு நோக்கி வருகின்றனர். பிஜி ஹாஸ்டல்களில் தங்கியிருந்தபடியும், அல்லது நண்பர்களோடு சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தபடியும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

கர்நாடக சுவையில் சாப்பாடு
தமிழகத்தின் எல்லையில் பெங்களூரு அமைந்திருந்தாலும்கூட, இங்குள்ள உணவு பழக்க வழக்கம் முற்றிலும் கர்நாடக பாரம்பரியம் சார்ந்ததாகவே உள்ளது. எந்த ஒரு ஹோட்டலிலும் சாம்பார், ரசம் போன்றவை கன்னட பாரம்பரிய முறையில்தான் பரிமாறப்படுகின்றன.

இனிக்கும் சாம்பார், புளிக்காத ரசம்..
பெங்களூருவிலுள்ள ஹோட்டல்களில் பரிமாறப்படும் சாம்பார், காரமேயின்றி, சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். ரசத்தில் புளிப்பு சுவை இருக்காது. 'சப்'பென்று இருக்கும். காரசாரமாக சாப்பிட்டு பழகிய நம்மூர்க்காரர்களுக்கு இங்குள்ள ஹோட்டல்கள் சரிபட்டு வராது. இதனால் ஹோட்டல் சாப்பாடே வெறுத்து போய்விடும் தமிழர்களுக்கு.

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பாவம்
கர்நாடக மரபு சாப்பாட்டை சாப்பிட்டு கஷ்டப்படுவோரில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்தான் அதிகம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் திருமணமாகாதவர்கள். எனவே ஹோட்டல் சாப்பாட்டை மட்டுமே நம்பியிருப்பவர்கள். இந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களின் பசிக்கு தீனிபோடும் இடமாகத்தான் மாறியுள்ளது கோரமங்களா.

இதுதான் கோரமங்களா
பெங்களூர் நகரிலுள்ள ஜெயநகர், ராஜாஜிநகர், ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட், விஜயநகர், இந்திராநகர் போன்றவை அனைத்து வசதிகளுடனும் கூடியதும், செல்வந்தர்கள் வசிக்க கூடியதுமான ஏரியாக்களாகும். அதேபோன்ற டாப் ஏரியாக்களில் ஒன்றுதான் கோரமங்களா. இருப்பினும் பெங்களூருவின் மற்ற ஆடம்பர பகுதிகளை விட கோரமங்களா ஒருபடி முன்னே நிற்கிறது. காரணம், இங்குள்ள நவநாகரீக லைப் ஸ்டைல்.

நவநாகரீக ஏரியா
அரைகுறை ஆடைகளுடன் நடமாடும் நவநாகரீக நங்கைகளையும், தடுக்கி விழுந்தால் ஹோட்டல்களையும் கொண்டதுதான் கோரமங்களா. பிற குடியிருப்பு ஏரியாக்கள் பாரம்பரியத்தை கட்டிக் காத்தால் கோரமங்களா மட்டும் அதற்கு நேர் எதிர்தான். ஆண்களுக்கு நிகராக சிகரெட்டும் வாயுமாக பெண்களை இங்கு பார்க்க முடியும், டவுசருடன்.

சிக்கன் எடு.. கொண்டாடு..
இந்த ஆடம்பரமான கோரமங்களாவில்தான் தமிழக சுவை உணவு பரிமாறும் ஹோட்டல்களும் கடந்த சில ஆண்டுகளில் எக்கச்சக்கமாக உருவாகியுள்ளன. இதனால்தான், தமிழக சாப்ட்வேர் இன்ஜினியர்களின் ஃபேவரைட் ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது கோரமங்களா. வார இறுதியா..? வண்டியை எடு கோரமங்களாவுக்கு. பேச்சுலர் பார்ட்டியா..? மங்களம் பாட கோரமங்களா கிளம்பு, என்பதுதான் தமிழ் மென்பொருள் வல்லுநர்களின் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையாக இருக்க முடியும்.

ஏராளம்.. தாராளம்
அஞ்சப்பர், அத்தப்பர், ஜூனியர் குப்பண்ணா, அடையார் ஆனந்தபவன், மதுரை இட்லிக் கடை, செட்டி நாடு சுவை ஹோட்டல்கள், சற்று தள்ளிப்போனால் எச்.ஏ.எல் பகுதியில் ஆத்தூரார் என தமிழ்நாட்டு உணவகங்கள் ஏராளமாக வந்துவிட்டன கோரமங்களாவில். சில வருங்கள் முன்புவரை தமிழக ஸ்டைல் ஹோட்டல்களை இங்கு பார்க்கவே முடியாது. இதுதவிர இத்தாலி, சைனீஸ், பஞ்சாபி, ராஜஸ்தானி என பல வகைகளுக்கும் கோரமங்களாவில் தனித்தனி உணவகங்கள் உள்ளன. தந்தூரி சிக்கனுக்கு தந்தூரி ஹட், கிரில் சிக்கனுக்கு எம்பையர் போன்ற தனிச்சுவை ஹோட்டல்களும் கோரமங்களாவிற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.

இது இன்ஜினியர்கள் ஏரியா
சாப்பாடு, ஹை-லைப் ஸ்டைல் போன்றவையும், தாங்கள் வேலை பார்க்கும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு செல்ல தேவையான வசதிகளும் இருப்பதால் பெரும்பாலான தமிழ் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கோரமங்களா, இந்திராநகர், பொம்மனஹள்ளி முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான பகுதிகளில் தங்கியுள்ளனர்.
-
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications