10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி டியூஷன் சென்றுவிட்டு திரும்பும்போது, அவரை மர்ம கும்பல் பிடித்து துன்புறுத்தியுள்ளது. அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்ததோடு மட்டுமின்றி, அதை வீடியோவாவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரின் ஜமுய் நகரில் கோச்சிங் வகுப்பு முடிந்து டூவீலரில் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவன் மற்றும் மாணவியை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைச் சேர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Student Harassed india

மர்ம கும்பல்

அப்போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து, ஸ்கூட்டரை நிறுத்தியுள்ள. பின்னர் இருவரையும் திட்டி, தாக்கியதுடன் வாகனத்தில் இருந்து கீழே இறங்குமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அந்த கும்பலை சேர்ந்த ஒருவரே தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மாணவனின் சட்டை காலரை பிடித்து தன்னை நோக்கி இழுக்க முயல்கிறார். இதிலிருந்து மாணவன் தப்பியதும், இருவரும் அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர். அப்போது அந்த கும்பல் அவர்களை துரத்தி சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் மாணவியை அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் பிடித்து இழுத்துள்ளார். அந்த மாணவியிடம் அநாகரிகமாக நடந்துள்ளார்.

அத்துமீறல்

மாணவன் உடனடியாக தலையிட்டு அவரை மீட்க முயன்றுள்ளார். இருவரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோதும், அந்த கும்பல் அவர்களை தொடர்ந்து துன்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் அந்த இடத்தை விட்டு ஸ்கூட்டரில் தப்பி செல்ல முயன்றபோது, மாணவியை கையால் பிடித்து இழுக்கிறார்கள்.. மேலும், இருவரையும் அந்த கும்பல் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது

அப்போது மாணவி, தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். இறுதியில் கும்பல் அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இரு மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜமுயில் நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட அவர், சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "10ஆம் வகுப்பு மாணவர்கள் சாலையில் வழிமறிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர். மாணவி கெஞ்சியும் அவரை கும்பல் இழுத்து சென்றுள்ளது. ஒரு பெண் எங்கு செல்ல வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் உரிமையை ஆணுக்கு யார கொடுத்தது? இதை கலாச்சாரம் என்று கூற முடியாது. ஆணாதிக்க மனநிலையே இதற்கு காரணம். இரவு 7 மணிக்கு கூட சாலையில் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏன் ஏற்பட்டது என்பதை பீகார் அரசு விளக்க வேண்டும்" என ராகுல் காந்தி சாடினார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு எந்தளவுக்கு மாநிலத்தில் மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+