மோடி பிரதமராயிட்டாரு.. எப்போ பெட்டி படுக்கையை கட்டுவீங்க... ? மாஜி பிரதமரை குடைந்தெடுக்கும் பாஜக
பெங்களூர்: பாஜக அறுதி பெரும்பான்மை பலம் பெற்றால், அரசியலைவிட்டே விலகிவிடுவேன், மோடி பிரதமரானால் மாநிலத்தை விட்டே ஓடிவிடுவேன் என்று கூறிய முன்னாள் பிரதமர் தேவகவுடா இப்போது தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார். எப்போது தேவகவுடா கர்நாடக மாநிலத்தை விட்டு போவார் என்று சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்படுகிறது.

அப்போவே அப்படித்தான்
மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாஜகவை பிடிக்காது. அவரது மகன் குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியபோதும் மகன் மீது கோபித்துக் கொண்டார். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவகவுடா, பாஜக அறுதி பெரும்பான்மைக்கு தேவைப்படும் 272 எம்.பிக்களை பெற்றுவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். மோடி பிரதமரானால் நான் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சூளுரைத்தார்.

புடிச்சிருந்தா பழகலாம்
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவை விட்டு எங்கே செல்வது என்று தேவகவுடா யோசிக்க வேண்டாம். குஜராத்துக்கு வாருங்கள். நானும் உங்கள் மகனைப்போலத்தான். எனவே எந்த மாதிரி வீடு வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். பண்ணை வீடா, பங்களா வீடா எதுவாக இருந்தாலும் குஜராத்தில் வேண்டிய வசதி செய்து தருகிறேன்" என்றார்.

கோபத்தில் கொக்கரிப்பு
மோடியின் பேச்சால் மேலும் கோபமடைந்த தேவகவுடா, எனக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். என்னை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். எனக்கு மோடி தேவையில்லை. மோடிக்கு எந்த தகுதியும் கிடையாது. சாமானிய மனிதனைவிட மோடி கீழ்தரமானவர். என்னை பார்த்துக்கொள்ள அவர் யார்? என்று கோபத்தில் வார்த்தைகளை கொப்பளித்தார்.

திடீர் பல்டி
நிலைமை நினைத்ததைவிட வேறுமாதிரி போனதை உணர்ந்து கொண்ட தேவகவுடா தேர்தல் ரிசல்ட் வெளியானதும் அடித்தார் ஒரு அந்தர்பல்டி. மோடி சந்தேகத்திற்கிடமின்றி பெருவாரியான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் அவர் தனது புத்திசாலித்தனத்தையும், திறமையையும் காண்பிக்க வேண்டும் என்று தேவகவுடா கூறினார்.

இப்போ என்ன செய்வீங்க..
இதோ இப்போது மோடி அறுதி பெரும்பான்மையுடன் பிரதமராக அறிவிக்கப்பட்டுவிட்டார். பதவியேற்பு விழா 26ம்தேதி நடைபெறுவது மட்டுமே பாக்கி. இதனால் சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் பாஜகவிலும் தேவகவுடாவை கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். எப்போது ஊரைவிட்டு போவீர்கள் என்று துளைத்து எடுத்து வருகிறார்கள்.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications