For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலை.. கொலை.. கொலை மட்டும்தான்.. காஷ்மீர் 370 விவாதத்தில் வைகோ ஆக்ரோஷ பேச்சு.. பரபரப்பு!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டு இருப்பதற்கு ராஜ்ய சபாவில் மதிமுக எம்பி வைகோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko | kashmir | இந்தியாவில் எமர்ஜென்சி.. காஷ்மீர் குறித்து வைகோ ஆவேசம்

    ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டு இருப்பதற்கு ராஜ்ய சபாவில் மதிமுக எம்பி வைகோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

    ராஜ்ய சபாவில் மதிமுக எம்பி வைகோ இந்த மசோதாவிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    வைகோ என்ன சொன்னார்

    வைகோ என்ன சொன்னார்

    வைகோ தனது பேச்சில், பாஜக காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலையில் ஈடுப்பட்டு உள்ளது. நேரு அளித்த வாக்குறுதியை மீறி இருக்கிறது மத்திய அரசு. காஷ்மீருக்கு நாம் கொடுத்த சத்தியத்தை மீறி இருக்கிறோம். அப்பகுதி மக்களை நாம் ஏமாற்றி இருக்கிறோம். இதை பார்க்கும் போது என் இரத்தம் கொதிக்கிறது.

    என்ன மக்கள்

    என்ன மக்கள்

    காஷ்மீரை பாதுகாக்க கார்கில் யுத்தத்தில் தமிழக இளைஞர்கள் ரத்தம் சிந்தினர். ஆனால் இன்று தமிழர்கள் உட்பட காஷ்மீர் மக்களின் உணர்வை புண்படுத்திவிட்டது மத்திய அரசு. காஷ்மீருக்கான அனைத்து அதிகாரங்களையும் நீக்கிவிட்டது மத்திய அரசு.

    உலகம்

    உலகம்

    காஷ்மீர் பிரச்சனையில் ஐநா தலையிட வழிவகுத்திருக்கிறது மத்திய அரசு. காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து தூக்கி எறிய முடியுமா?. அவர்கள் வாழ்ந்த பூமியை நாம் அவர்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்கிறோம். இது பெரிய ஆபத்தில் முடிய போகிறது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இந்த காஷ்மீர் பிரச்சனையில் பாஜக மிகப்பெரிய தவறை செய்துள்ளது. காஷ்மீரில் ஒரு பக்கம் பாகிஸ்தான் பிரச்சனை செய்கிறது. ஒரு பக்கம் தீவிரவாதிகள் பிரச்சனை செய்கிறார்கள். இப்போது நீங்கள் அவர்களின் கைகளில் வசமாக சிக்கி உள்ளீர்கள். மொத்தமாக காஷ்மீரை பிரித்து நீங்கள் பெரிய ஆபத்தில் கை வைத்துள்ளீர்கள்.

    கொலை மட்டும்தான்

    கொலை மட்டும்தான்

    இந்த காஷ்மீர் பிரச்சனையில் பாஜக மட்டும் தவறு செய்யவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் முழு குற்றவாளிதான். ஷேக் அப்துல்லாவை அன்று கைது செய்து தமிழகத்தில் சிறையிலடைத்தது காங்கிரஸ்.
    நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். இங்கு நடந்து இருப்பது ஜனநாயக கொலை.. கொலை.. கொலை மட்டும்தான், என்று மிகவும் ஆக்ரோஷமாக வைகோ அவையில் பேசினார்.

    English summary
    BJP did a Constitutional murder by removing Article 370 says Vaiko in Rajya Sabah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X