காத்திருந்த தலைகள்.. கண்ணசைத்த அமித் ஷா.. சச்சின் பைலட்டை வளைக்க தயாராகும் ராஜஸ்தான் பாஜக!
ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் பாஜகவில் இணையலாம் என்று ராஜஸ்தான் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பின் அமித் ஷாவின் அசத்தல் வழிகாட்டுதல் உள்ளது என்கிறார்கள்.
ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் . இதற்கான தீர்மானம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

பாஜக
இந்த நிலையில் சச்சின் பைலட் நேற்று பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. நேற்று அவர் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை பார்க்க போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இதை சச்சின் பைலட் தரப்பு கடைசியில் மறுத்தது. பாஜகவில் சேரும் எண்ணத்தில் சச்சின் பைலட் இல்லை என்று கூறப்பட்டது. அவர் காங்கிரசில்தான் இருப்பார் என்றும் கூறப்பட்டது.

என்ன எண்ணம்
இதனால் பாஜகவும் இவரை அழைக்கும் எண்ணத்தில் இல்லை. ஆட்சி கவிழ்ந்தால் தானாக கவிழட்டும் என்றும் பாஜக நினைத்தது. இதனால் பாஜக தலைவர்கள் இதை பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை. முக்கியமாக பாஜகவின் ராஜஸ்தான் தரப்பு தலைவர்கள் கூட எதுவும் சொல்லவில்லை. பாஜக சச்சின் பைலட் மீது பெரிய ஆர்வம் காட்டவில்லை.

வெளியேறும் எண்ணம்
ஆனால் இப்போது சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து வெளிவரும் எண்ணத்தில் இருக்கிறார். அவரின் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி தலைவர் பறிக்கப்பட்டு உள்ளது . அதேபோல் இன்னொரு பக்கம் அவரின் ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கண்டிப்பாக காங்கிரசில் இருந்து வெளியேறுவார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் அமித் ஷா தனது கவனத்தை சச்சின் பைலட் பக்கம் திருப்பி உள்ளார்.

அமித் ஷா திட்டமும்
இதுதான் சச்சின் பைலட்டை வளைக்க சரியான நேரம் என்று அமித் ஷா நினைப்பதாக கூறுகிறார்கள். கலக்கத்தில் இருக்கும் சச்சின் பைலட்டிற்கு கை கொடுத்து காக்க அமித் ஷா திட்டமிடுகிறார் என்கிறார்கள். இதன் மூலம் சச்சின் பைலட் போன்ற வலுவான தலைவரை வளைக்கலாம். அதே சமயம் ராஜஸ்தானிலும் இன்னும்சில எம்எல்ஏக்களை இடம் மாற வைத்து ஆட்சியை கவிழ்க்கலாம் என்று அமித் ஷா திட்டமிடுவதாக கூறுகிறார்கள்.

என்ன உத்தரவு
இதற்காக ராஜஸ்தான் பாஜக தலைவர்களுக்கு அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளார் என்றும் கூறுகிறார்கள். அதாவது சச்சின் பைலட் உடன் நட்பாக இருக்கும் பாஜக தலைவர்கள் அவரிடம் பேச வேண்டும். அவருக்கு பாஜகவின் ஆதரவை அளிக்க வேண்டும். அவரை நம் பக்கம் எப்படியாவது இழுக்க வேண்டும் என்று அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

வாங்க வாங்க
இதனால்தான் தற்போது சச்சின் பைலட்டை ராஜஸ்தான் பாஜகவின் மூத்த தலைவர் பாஜகவிற்கு வரவேற்று இருக்கிறார். சச்சின் பைலட் பாஜகவில் இணையலாம். அவருக்கு நாங்கள் ஆதரவு தருவோம். பாஜக பரந்துபட்ட கொள்கை கொண்ட கட்சி. பாஜகவில் இணைவதன் மூலம் அவர் சாதிக்க முடியும். அவருக்கான கதவு எப்போது எங்களிடம் திறந்தே இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications