For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. பாஜகவின் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம்: எம்.பி.பாட்டீல் பரபர தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்சியமைக்க எடியூரப்பாவைதான் ஆளுநர் அழைப்பார்..சொல்கிறார் சு.சாமி- வீடியோ

    பெங்களூர்: பாஜகவின் 6 எம்எல்ஏக்கள் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று அக்கட்சி முன்னாள் அமைச்சரான எம்.பி.பாட்டீல் தெரிவித்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சித்தராமையா அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த, எம்.பி.பாட்டீல் இன்று நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன்தான் உறுதியாக நிற்கிறார்கள். யாரும் வேறு பக்கம் போக மாட்டார்கள்.

    BJPs 6 MLAs are in touch with the Congress: MP Patil

    அதேநேரம், உல்டாவாக பாஜகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள்தான் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

    அந்த 6 எம்எல்ஏக்கள் யார் என நிருபர்கள் கேட்டதற்கு, அது ரகசியம் என்று எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். பாட்டீல் இவ்வாறு கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையிலேயே பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார்களா, அல்லது பாஜகவுக்கு ஷாக் கொடுத்து தங்கள் பக்கம் அவர்கள் ஆபரேஷன் செய்யாமல் இருக்கச் செய்ய பாட்டீல் இவ்வாறு கூறினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஏனெனில் எடியூரப்பா கூட்டியிருந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். அவரை தங்கள் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former minister MP Patil has said that the BJP's 6 MLAs are in touch with the Congress which shake the BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X