குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்க.. தம்பிதுரையிடம் கேட்ட வெங்கய்யா நாயுடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தம்பிதுரை எம்பியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன.

BJP seeks ADMK support in the President Election

எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் பாஜக இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பிலும் பாஜக சார்பிலும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு தர பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அதிமுக எம்பியான தம்பிதுரையை வரவழைத்து ஆதரவு தருமாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP seeks ADMK support in the President Election. Today Venkaih naidu met ADMK MP Thambidurai and asked support for the election.
Please Wait while comments are loading...