For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இமாச்சல் பிரதேசத்தின் புதிய முதல்வர்.. பாஜகவின் ஜெய்ராம் தாக்குர் தேர்வு!

இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் பாஜக கட்சி அபாரமாக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இதனால் மோசமாக ஆட்சியை இழந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பாஜக கட்சி இமாச்சல பிரதேசதிற்கான முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் இமாச்சல பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 38 இடங்களில் வென்று உள்ளது. காங்கிரஸ் 18 இடங்களில் வென்று இருக்கிறது. மற்றவைகள் 3 இடத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேம் குமார் துமல் தோல்வி

பிரேம் குமார் துமல் தோல்வி

இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக கட்சி இங்கு அபாரம் வெற்றி அடைந்தும் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் அவரது தொகுதியில் வெற்றியை பறிகொடுத்துள்ளார். பிரேம் குமார் துமல், தான் போட்டியிட்ட சுஜான்பூர் தொகுதியில் மொத்தம் 12,836 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஜிந்தர் ராணா 15,656 வாக்குகள் பெற்று உள்ளார். இதையடுத்து ரஜிந்தர் ராணா, பிரேம் குமாரை விட 2,820 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

பாஜக கட்சியில் முதல்வர் பதவிக்கு புதிய நபர் தேர்ந்தெடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. பாஜக கட்சி நான்கு வேட்பாளர்களை முதல்வருக்கான பட்டியலில் வைத்து இருந்தது.முதலில் ஜேபி நட்டா பாஜக கட்சியின் முதல் தேர்வாக இருந்தார். பிரேம் குமார் துமலின் மகனான அனுராக் தாக்குரும் பட்டியலில் இருந்தார். மேலும் அணில் ஷர்மா, ஜெய்ராம் தாக்குர் ஆகியோரும் இந்த பட்டியலில் இருந்தார்கள். இதனால் யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் பாஜக கட்சி குழம்பி வந்தது.

ஜெய்ராம் தாக்குர்

ஜெய்ராம் தாக்குர்

தற்போது ஜெய்ராம் தாக்குர் இமாச்சல பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் சில நாட்களில் இவர் தன் அமைச்சவரையுடன் பதவி ஏற்க இருக்கிறார். தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்த பாஜக கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.

ஜெய்ராம் தாக்கூரின் வரலாறு

ஜெய்ராம் தாக்கூரின் வரலாறு

இமாச்சலில் இருக்கும் 'மாந்தி' பகுதிகளில் இவர் மிகவும் வலிமையான வேட்பாளர் அவர். அந்த பகுதியில் இருந்து முதல்வர் ஆகும் முதல் நபர் இவர்தான். அங்கு முந்தைய பாஜக ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்துள்ளார். கட்சியின் மாநில தலைவராக 2006-2009ல் இருந்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இருந்த ஜெபி நட்டாவிற்கு இவர் நெருங்கிய நண்பர்.

English summary
BJP CM candidate Prem Kumar Dhumal is last in Sujanpur. Congress candidate Rajinder Rana win with 15,656 votes, where as Prem Kumar Dhumal got only 12,836 votes. BJP was seraching for new CM candidate. JP Nadda, Anurag Thakur, Anil Sharma, Jairam Thakur were in the list for CM. Finally BJP selected Jairam Thakur as the new CM for Himachal Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X