இதெல்லாம் ஒரு டிரஸ்சா.. மணமகன் மட்டமான துணி எடுத்து அனுப்பியதாக கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்
புவனேஸ்வர்: திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் மணப்பெண்ணுக்காக லக்னோவில் இருந்து ஆசை ஆசையாக டிரஸ் எடுத்து கொடுத்த நிலையில் அந்த டிரஸ் மட்டமாக இருக்கிறது என்று கூறி கோபத்தில் மணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு துரதிர்ஷ்டவசமாக சில திருமணங்கள் நின்று போவது உண்டு.
இதற்கு பல்வேறு காரணங்களால் இருக்கும். பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்காமல் போவது.. திருமண வீட்டினர் இடையே ஏற்படும் மனக்கசப்புகள் என ஏராளமான காரணங்கள் இருக்கும்.

சரியான உடையை எடுத்து தரவில்லை
ஆனால், மணமகன் சரியான உடையை எடுத்து தரவில்லை என்ற கோபத்தில் மணமகள் திருமணத்தையே நிறுத்தியிருக்கும் சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் நைனிடால் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. மணமக்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகவே கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் வைக்கப்பட்டது.

காதலர்கள் போல பேசி வந்தனர்
நவம்பர் மாதம் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மணமக்கள் இருவரும் காதலர்கள் போல பேசி வந்துள்ளனர். இருவரும் தவறாமல் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்து இருக்கின்றனர். திருமணம் நெருங்கி வந்ததால், தனது வரும் கால மனைவியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு லக்னோவில் இருந்து இளைஞர் லெஹெங்கா எனப்படும் முழு நீள உடையை எடுத்து அனுப்பியிருக்கிறார்.

இளம்பெண்ணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை
ஆனால் இதுவே இந்த திருமணத்திற்கு வினையாக அமைந்ததுதான் வருத்தத்திற்குரிய விஷயம். ஆம், மாப்பிள்ளையாக வர இருந்த அந்த இளைஞர் எடுத்து கொடுத்த உடை இளம்பெண்ணுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதெல்லாம் ஒரு ஆடையா வெறும் 10 ஆயிரத்திற்கு மட்டமாக எடுத்து கொடுத்து இருக்கிறாரே என்று கோபத்தில் பொங்கி இருக்கிறார். ஒரு வருங்கால மனைவியாக போகிறவருக்கு இப்படியா மட்டமான உடை எடுத்துக் கொடுப்பது என கோபம் அடைந்த அந்தப் பெண், இவர் நமக்கு செட் ஆக மாட்டார் என்று உடனடியாக திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

திருமணத்தை நிறுத்துவதாக கூறிய பெண்
இதையே பெற்றோரிடமும் சொன்னதால் வேறு வழியின்றி திருமணத்தை நிறுத்துவதாக பெண் வீட்டார் கூறினார். ஆனால், திருமணத்திற்காக பத்திரிகை அடித்து தடல் புடல் ஏற்பாடு செய்துவிட்டதாக கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டினர் இதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு இந்த விவகாரம் சென்றது. போலீசார் சமரசம் செய்ததில் இருவரும் பரஸ்பரம் திருமணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.

ஆடையால் திருமணம் நின்ற சம்பவம்
திருமண கனவுகளுடன் ஆசை ஆசையாய் காதல் வளர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடிகளுக்குள் ஒரு ஆடை இப்படி திருமணத்தையே நிறுத்தும் அளவுக்கு போய் விட்டதே என்று அப்பகுதி மக்கள் பரபரப்புடன் பேசிக்கொண்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications