For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 நிறுவனங்களுக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ

By Mathi
Google Oneindia Tamil News

CBI 'clears' allocation of 60 coal blocks
டெல்லி: 50 நிறுவனங்களுக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதால், மத்திய அரசுக் கருவூலத்துக்கு ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

195 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் 16 ஒதுக்கீடுகளில் மோசடி, தவறான தகவல்கள் மற்றும் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இதனையடுத்து அந்த ஒதுக்கீடுகளை பெற்ற ஏ.எம்.ஆர். அயர்ன் அண்ட் ஸ்டீல், ஜே.எல்.டி. யாவத்மல் எனர்ஜி, வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக், விகாஸ் மெடல்ஸ், கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், ஜார்க்கண்ட் இஸ்பத், கிரீன் இன்ப்ராஸ்ட்ரக்சர், ஹிண்டால்கோ, பி.எல்.ஏ. இண்டஸ்ட்ரீஸ், காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் அண்ட் காஸ்ட்ரான் மைனிங் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாராணை நிலவர அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில் 50 நிறுவனங்களுக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The CBI, which has completed its investigation in six of the 16 cases under its purview, will inform the Supreme Court that it has found no criminality in the allocation of nearly 60 coal blocks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X