For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமிஷ்னரை கைது செய்ய வந்த சிபிஐ.. தர்ணாவில் குதித்த மமதா.. கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு!

கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையில் இருந்து தர்ணா போராட்டம் இருக்க போவதாக மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்

    கொல்கத்தா: கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்து இருக்கிறார். தற்போது ராஜீவ் குமார் வீட்டில் மமதா பானர்ஜி முகாமிட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொல்கத்தாவை உலுக்கிய தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் இரண்டும்தான் தற்போது கொல்கத்தாவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம். தி ரோஸ் வேலி ஊழலில் 15,000 கோடி ரூபாயும், சாரதா ஊழலில் 2500 கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

    இந்த ஊழலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உறுப்பினர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    புகார்

    புகார்

    இந்த நிலையில்தான் இந்த புகாரில் கொல்கத்தா போலீஸ் கமிஷன் ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் பெயரும் சேர்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இவரை விசாரிக்க சிபிஐ முயன்று கொண்டு இருந்தது. இவரை கைது செய்யும் திட்டத்திலும் சிபிஐ இருந்தது.

    தடை இருக்கிறது

    தடை இருக்கிறது

    ஆனால் கொல்கத்தாவிற்குள் சிபிஐ நுழைய தடை இருக்கிறது. மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே அங்கு சிபிஐ நுழைய முடியும். அதே போல் மாநில அரசின் அனுமதி இல்லாமல் அங்கு யாரையும் சிபிஐ விசாரிக்க முடியாது. சில நாட்களுக்கு முன்பே இந்த தடை விதிக்கப்பட்டது.

    இன்று நுழைந்தனர்

    இன்று நுழைந்தனர்

    இந்த நிலையில் இன்று போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய அவரது இல்லம் நோக்கி 40 சிபிஐ அதிகாரிகள் வந்து இருக்கிறார்கள். இவர்கள் ஆனால் கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் வீட்டிற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். தற்போது இதில் 15 சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    தர்ணா இருக்கிறார்

    தர்ணா இருக்கிறார்

    இதை தொடர்ந்து தற்போது போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டிலேயே மமதா பானர்ஜி தர்ணா இருந்து வருகிறார். நாளையில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக தர்ணா இருக்க போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மோசம் என்றார்

    மோசம் என்றார்

    சிபிஐ மத்திய அரசின் சொல்லை கேட்டு மோசமாக நடந்து வருகிறது. உலகில் இருக்கும் மிக முக்கியமான நல்ல போலீஸ் அதிகாரிகளில் ராஜீவ் குமாரும் ஒருவர். என்னுடைய காவல்துறையினரை நான்தான் பாதுகாப்பேன் என்று மமதா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். இதனால் கொல்கத்தாவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    CBI vs Mamata Banerjee: WB CM starts her Dharna in Commissioner Home against Central.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X