For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவிற்கு பெரும் சிக்கல்.. மாஸ்க் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் தடை.. பரபரப்பு காரணம்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முகமூடியுடன் வந்து உதவிய நபர்... சல்யூட் அடித்த சீன போலீசார்

    டெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது.

    யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

    சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 258 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 11000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

    324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை! 324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை!

    என்ன மாஸ்க்

    என்ன மாஸ்க்

    இந்த நிலையில் சீனாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் எல்லோரும் முகத்தில் முகமூடி அணிந்து சுற்றி வருகிறார்கள். வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இவர்கள் எல்லோரும் முகமூடி அணிந்து வருகிறார்கள். இதற்காக N-95 ரக முகக் கவசம் பயன்படுத்தப்படுகிறது. இது கிருமிகள் பரவுவதை தடுக்கும். அதனால் இந்த மாஸ்க் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலையும் மிக அதிகம் ஆகும்.

    விலை அதிகம்

    விலை அதிகம்

    தற்போது கெடுபிடி காரணமாக அங்கு மாஸ்க் விலை மொத்தமாக அதிகரித்துள்ளது. இதில் நிறைய முறைகேடுகளும் நடந்து வருகிறது. சீனாவில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்தியாவில் இருந்துதான் மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் இருந்துதான் மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையை, சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் சீனாவிற்கு மாஸ்க் ஏற்றுமதி செய்கிறது. இதற்கான தேவை அதிகம் ஆகியுள்ளது.

    ஆனால் தடை

    ஆனால் தடை

    இந்த நிலையில் இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை மாஸ்க் ஏற்றுமதி செய்ய கூடாது. உற்பத்தி செய்யப்படும் மாஸ்குகள் நாட்டிற்குள் விற்பனை செய்யப்படலாம். மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம். ஆனால் சீனாவிற்கு அனுப்ப கூடாது. முற்றிலுமாக விமான, கப்பல் ஏற்றுமதியை இதற்காக இந்தியா தடை செய்து இருக்கிறது

    என்ன நிலை

    என்ன நிலை

    இந்தியாவில் மாஸ்க் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு விளக்கி உள்ளது. இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே தற்போது சீனாவில் பாலிதீன் பைகள், குடிநீர் குடுவைகள், உள்ளாடைகள் போன்றவற்றை முகக்கவசங்களாக அணிந்து கொள்ளும் நிலை உருவானது. அங்கு மிக மோசமான மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Central Government banning the importing of N95 masks to China for Coronavirus suddenly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X