For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல் பரவல்... தெலுங்கானா துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்த சந்திரசேகர ராவ்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி பலர் உயிரிழந்து வரும் நிலையில் அம்மாநில துணை முதல்வரை அதிரடியாக நீக்கியுள்ளார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

Chandrasekhara Rao dismisses deputy CM for his inactivity

தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் நோய் தாக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மாநில அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் மாநில துணை முதல் அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டி.ராஜய்யாவை, முதல்வர் சந்திரசேகரராவ் அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

அவருக்கு பதிலாக ஸ்ரீஹரி சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீஹரி எம்.பி. ஆவார். அவசரமாக ஆளுநர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன் ஸ்ரீஹரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதல்வரை முதல்வர் ராவ் அதிரடியாக நீக்கியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Telangana CM Chandrasekhara Rao has dismissed deuputy CM for his inactivity towards containing Swine flu spread in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X