டோக்லாம் சர்ச்சை: இந்தியாவின் கோழிக் கழுத்துக்கு சீனா குறி- வடகிழக்கு துண்டிக்கப்படும் அபாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிலிகுரி: டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்துவிட்டால் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 'கோழிக் கழுத்து' என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கக் கூடிய சிலிகுரி பிராந்தியத்தை சீனா எளிதாக நெருங்கிவிடும் என்பதால்தான் இந்தியா கடும் உக்கிரத்தை வெளிப்படுத்தி வருகிறது.

டோக்லா பீடபூமி என்பது இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும். டோக்லா பீடம்பூமியை ஒட்டியதுதான் இந்தியாவின் கோழிக் கழுத்து எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி பிராந்தியமாகும்.

இந்த கோழி கழுத்து பகுதி பிராந்தியம்தான் இந்தியாவின் பிறபகுதிகளை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கக் கூடியதாகும். இதை ஆக்கிரமித்துவிட்டால் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் இந்திய பெருநிலப் பரப்பில் இருந்து எளிதாக துண்டிக்கப்பட்டு விடும்.

 பூடானுக்கு ஆதரவு

பூடானுக்கு ஆதரவு

டோக்லா பீடபூமி யாருக்கு என்பதில் சீனாவுக்கும் பூடானுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை. இதில் பூடானுக்கே சொந்தம் என்கிற நிலைப்பாடுடன் இருக்கிறது இந்தியா.

 இந்தியாவின் அச்சம்

இந்தியாவின் அச்சம்

இதனால்தான் இப்போது சீனா சாலை அமைப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் இந்த சாலையை சீனா அமைத்துவிட்டால் கோழிக் கழுத்து பகுதிக்கு எந்த நேரத்திலும் சீனாவால் பேராபத்து நிகழலாம்; இதனால் வடகிழக்கு பிராந்தியத்தை இந்தியா இழக்கவும் நேரிடும் என்பதும் இந்தியாவின் அச்சம்.

 அப்படியெல்லாம் இல்லை

அப்படியெல்லாம் இல்லை

இதனால்தான் இந்த சாலையை அமைக்கவிடாமல் தொடர்ந்து எதிர்ப்பதுடன் எல்லையில் படைகளையும் குவித்து வருகிறது இந்தியா. ஆனால் சீனாவோ, இந்தியாவின் கோழிக் கழுத்துக்கு நாங்கள் குறிவைக்கவில்லை.. இந்தியாதான் அப்படியான ஒரு பிரசாரம் மூலம் மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்துகிறது என்கிறது.

 குஜராத்தின் ரான் ஆப் கட்ச்

குஜராத்தின் ரான் ஆப் கட்ச்

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 1972-ம் ஆண்டு யுத்தத்தின் போது குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியைத்தான் பாகிஸ்தான் முதலில் தாக்கியது. ஏனெனில் இந்த எல்லைப் பகுதி என்பது சதுப்பு நிலத்தினூடே 100 கிலோ மீட்டர் பயணித்து செல்ல வேண்டிய இடம். இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் யாரும் செல்லாத ஒரு எல்லைப் பகுதி. அன்று பாகிஸ்தானுக்கு ரான் ஆப் கட்ச் போல... இன்று சீனாவுக்கு இந்தியாவின் கழுத்து குறியாக இருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கள யதார்த்தம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The India-China standoff on Sikkim border is over a road in a disputed territory in Bhutan, but its strategic implication will be huge for the North East because it makes the famous chicken neck Siliguri corridor
Please Wait while comments are loading...