For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய வீரர்களின் உச்சகட்ட பொறுமையை சீண்டிப் பார்த்த சீனா- வீடியோ

By Mathi
Google Oneindia Tamil News

இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த மே மாதம் இந்திய வீரர்களின் உச்சகட்ட பொறுமையை சீன ராணுவம் சீண்டிப் பார்க்கும் வகையில் அத்துமீறி நடந்த அராஜக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்திய எல்லைக்குள் வீம்புக்கு நுழைந்து திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்கியது சீன ராணுவம். கடந்த மாதம் சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் நடந்து கொண்ட அடாவடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது.

மே அடாவடி

மே அடாவடி

இதேபோல் மே மாதம் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா அடாவடியாக இந்திய எல்லையை உடைத்துக் கொண்டு அத்துமீற முயற்சித்தது. இதனால் அப்போது அருணாச்சலபிரதேச எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

சீண்டும் சீனா

சீண்டும் சீனா

அது தொடர்பான வீடியோவும் இப்போது பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இந்திய எல்லையில் கற்களால் ஆன அரண்களைப் பாதுகாத்து நமது வீரர்கள் நிற்கின்றனர். சீனா ராணுவத்தினர் நம்மை சீண்டும் வகையில் நம் கண்முன்னேயே அந்த கற்களை தூக்கி போடுகின்றனர்.

சீற்றத்தை தரும்...

சீற்றத்தை தரும்...

10 நிமிடத்துக்கும் மேலாக பெரும் பதற்றத்தை உருவாக்க கூடிய வகையில் இந்த வீடியோ காட்சி இருக்கிறது. பார்க்கின்ற நமக்கே பதற்றமும் சீற்றமும் ஏற்படும்.

உச்சகட்ட பதற்றம்

ஆனால் எல்லையில் உச்சகட்ட பொறுமையோடு சீனாவின் இந்த சீண்டலையும் அடாவடியையும் நம் ராணுவ வீரர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். எல்லைகளில் சீனா தொடர்ந்து இப்படி வாலாட்டிக் கொண்டிருக்கிறது... ஆனால் பழியை நம் மீது அபாண்டமாக போடுகிறது சீனா.

English summary
One more Video here on the Chinese Military trying to enter in Arunachal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X