For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்தும் இந்தி மயம்! இது பாஜக அல்ல... காங்கிரசும் இப்படித்தான்! மாநாட்டில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாட்கள் சிந்தனையாளர் மாநாடு நடந்தது. இந்ந மாநாட்டில் தலைவர்கள் வரவேற்பு, பேச்சு, ஆலோசனை உள்ளிட்ட அனைத்தும் இந்தி மொழியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) மே 13 முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டை சோனியா காந்தி துவங்கி வைத்தார்.

3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி

இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கட்சியின் சீர்த்திருத்தம், தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் அந்தந்த குழுக்கள் மூலம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டது.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பேசினார். இவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்தததோடு, கட்சியினர் மக்களை சந்திக்க வேண்டும். மக்களிடம் உறவை வளர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்திக்கு முக்கியத்துவம்

இந்திக்கு முக்கியத்துவம்

இந்நிலையில் தான் சிந்தனையாளர் மாநாடு பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மாநாடு முழுவதும் இந்தி மொழி பயன்பாடு தான் அதிகமாக இருந்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல், தலைவர்கள் வரவேற்பு, ஆலோசனை, பரிந்துரைகள் என அனைத்தும் இந்தி மொழியிலேயே நடந்துள்ளது. இந்தி பேசும் மாநிலத்தில் நிகழ்ச்சி நடந்திருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியில் ஒரு தேசிய நிகழ்வு முழுவதுமாக இந்தி மொழியில் நடந்தது இதுவே முதல் முறை என காங்கிரஸ் கட்சியினரே கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இல்லை

இதற்கு முன்பு இல்லை

இதற்கு முன்பு காங்கிரஸ் இவ்வளவு பெரிய மாநாட்டில் இந்தியை பயன்படுத்தியது இல்லை. அனைத்து மாநிலத்தினருக்கும் புரியும் வகையில் ஆங்கில மொழி பயன்பாடு தான் அதிகமாக இருக்கும். இந்நிலை தற்போது மாறியுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் பேசிய சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் ஆங்கில மொழியிலும் பேசினர்.

இந்தி மோகம் ஏன்?

இந்தி மோகம் ஏன்?

காங்கிரசுக்கு ஏன் திடீரென இந்தி மோகம் வந்தது என்ற கேள்விக்கு, "இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் 200 முதல் 250 மக்களவை தொகுதிகள் உள்ளதை புறக்கணித்துவிட முடியாது'' என்றார். மேலும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் தயாரிக்கும் போது கூட இந்த நிலைப்பாடுகள் இருந்ததா? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ‛‛தற்போது காலம் மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும்'' என்றார்.

நேரு மாநாட்டிலும் இந்தி கிடையாது

நேரு மாநாட்டிலும் இந்தி கிடையாது

இதற்கு முன்பு சிந்தனையாளர் மாநாடு ஒருபோதும் இந்தி மொழியில் நடந்தது இல்லை என தெரிவித்த அவர் தற்போது தான் முதல் முறையாக இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கு முன் 1950 நாசிக்கில் நடந்த மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும் கலந்து கொண்டார். அங்கு இந்தி இல்லை. இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதுதான் காலம்காலமாக தொடர்ந்தது. தற்போது இந்நிலை மாறியுள்ளதாக கட்சியினரே கூறியுள்ளனர்.

English summary
A 3-day Chintan Shivir conference on behalf of the Congress party was held in Udaipur, Rajasthan. It has been reported that Congress party contemplated in hindi at a first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X