CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங்

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாமில் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) முதல் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிர்வாகிகளை அம்மாநில போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் என்று CJP தலைவர் அபிஜீத் தீப்கே எச்சரித்துள்ளார்.

பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அசாம் மாநிலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது. வழக்கமாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது எனில், அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், அசாம் பாஜக அரசு ஒரு படி மேலே போய், மாட்டுக்கறி விற்பனைக்கு மட்டுமல்லாது சாப்பிடுவதற்கு கூட தடை விதித்தது.

CJP

பள்ளிகளை பாதுகாக்க

அப்புறம் முதன்முதலில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது, மதராசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட்டது, தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கம் என அடுத்தடுத்து பல சர்ச்சைகளை பாஜக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்கிற இயக்கத்தை CJP முன்னெடுத்தது. மட்டுமல்லாது வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களையும் CJP அமைப்பினர் நேரில் சந்தித்து, அவர்களின் நிலைமையை கேட்டறிந்து வருகின்றனர்.

தன்னார்வலர்கள் கூட்டம்

இதற்காக CJP தன்னார்வலர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கவுகாத்தியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. இப்படி ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துக்கொண்ட அசாம் காவல்துறை, இதில் எப்படியாவது ஏழரையை கூட்டுவது என்கிற முடிவுடன், தன்னார்வலர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதாக CJP குற்றம்சாட்டியிருந்தது.

கூட்டம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே CJP அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அனுமதி வேண்டுமா?

பொதுக்கூட்டம் நடக்கிறது, ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடக்கிறது எனில்.. பெர்மிஷன் இல்லை என்று சொல்லி கைது செய்யலாம். ஆனால், கூட்டம் நடந்தது ஒரு வீட்டில். வீட்டிற்குள் கூட்டம் நடத்த எந்த அனுமதியும் தேவையில்லை. மட்டுமல்லாது CJP என்பது தடை செய்யப்பட்ட அமைப்பு கிடையாது. இப்படி இருக்கையில் திடீரென அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது, அசாம் காவல்துறை மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.

போராட்டம் வெடிக்கும்

இது குறித்து CJP தலைவர் அபிஜித் தீப்கே தனது x பக்கத்தில், "கைது செய்யப்பட்ட அசுதோஷ் ரங்காவை உடனடியாக ரிலீஸ் செய்யாவிட்டால், நான் எனது உறுப்பினர்களுடன் அசாம் வருவேன். அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மாவுக்கு தைரியமிருந்தால் எங்களையும் கைது செய்யட்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே மத்திய பாஜக அரசுக்கும் CJP அமைப்புக்கும் ஏழாம் பொருத்தமாய் இருக்கிறது. CJP நடத்திய போராட்டத்தால்தான் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை விட்டு ராஜினாமா செய்தார். இப்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்த இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+