For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதன்கோட் தாக்குதலில் பலியான வீரர் பதே சிங் காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்

By Siva
Google Oneindia Tamil News

பதன்கோட்: பதன்கோட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தேசிய பாதுகாப்பு படை வீரர் சுபேதார் பதேஹ் சிங் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வாங்கியவர்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் சனிக்கிழமை 5 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பாதுகாப்பு படையினர் பலியாகினர். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்றைய தாக்குதலில் படுகாயம் அடைந்த பாதுகாப்பு படையினர் 4 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தனர்.

பதன்கோட் தாக்குதலில் பலியான சுபேதார் பதேஹ் சிங்(51) 1995ம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் காமன்வெல்த் துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர். அவரது மறைவுக்கு இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

பதேஹ் சிங்கின் வீரமரணம் குறித்து இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவர் ரனிந்தர் சிங் கூறுகையில்,

பதேஹ் சிங் தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். இந்த நாடு தனது அருமை மகன் மற்றும் திறமையான துப்பாக்கி சுடும் வீரரை இழந்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்றார்.

பதேஹ் சிங் கடந்த 2009ம் ஆண்டு டோக்ரா ரெஜிமென்ட்டில் சுபேதார் மேஜராக ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு அவர் தேசிய பாதுகாப்பு படையில் சுபேதாராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதன்கோட்டிற்கு மாற்றப்பட்டார்.

English summary
Subedar Fateh Singh, a 51-year-old Army man who lost his life during combing operations at the Indian Air Force (IAF) base near Punjab's Pathankot town on Saturday, had won a gold and a silver medal at the first Commonwealth Shooting Championships held in Delhi in 1995.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X