For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ்.. ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு

மேகலாயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ்- வீடியோ

    ஷில்லாங்: மேகாலயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.

    மேகாலயாவின் அம்பாதி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பாக வென்ற மியானி டி ஷிரா முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் ஆவார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 21 ஆகி உள்ளது.

    Congress becomes the largest party in Meghalaya, will claim to form the government

    மேகாலயா சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இங்கு பெரும்பான்மை பெற 31 பேர் தேவை. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதற்கு முன் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய மக்கள் கட்சிக்கு சரியாக 20 எம்எல்ஏ பலம் இருந்தது.

    இதனால் ஆளுநர் தேசிய மக்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஐக்கிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது. தற்போது மேகாலயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.

    தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ். அம்பாதி தொகுதியையும் சேர்த்து மேகாலயாவில் காங்கிரஸுக்கு 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    ஏற்கனவே கர்நாடகாவில் வெற்றிபெற்ற பெரும்பான்மை கொண்ட மஜத-காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் வாஜுபாய் வாலா தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் காங்கிரஸ் பீகார், கோவா,மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, இப்பொது மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.

    English summary
    Congress becomes the largest party in Meghalaya, will claim to form the government .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X