சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக போராட்டம்.. டெல்லியில் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
டெல்லி: சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் திமுக பங்கேற்றுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியிலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
#WATCH Delhi: Opposition leaders including Congress Interim President Sonia Gandhi protest in front of Gandhi statue in Parliament premises, against #CAA_NRC_NPR #BudgetSession pic.twitter.com/wolQCzvz0Q
— ANI (@ANI) January 31, 2020
இதில் திமுக எம்பிக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், இந்தியாவை காப்போம், சிஏஏ, என்ஆர்சி வேண்டாம் என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற போதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்காத நிலையில் தற்போது இரு தரப்பிடையே சுமூகம் உள்ளதால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications