ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்.. இலவச மின்சாரம்.. 10 அதிரடி வாக்குறுதிகள்.. பாஜக கனவை கலைக்க காங். வேகம்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத் : குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக 10 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.

குஜராத்தில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று, ஆறாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முழுமுனைப்போடு செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தில் தீவிரமாக தேர்தல் பணி ஆற்றி வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் கோட்டையைத் தகர்த்து, அக்கட்சியை ஆட்டம்காண வைக்கும் நோக்கத்தோடு அதிரடியாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 முறை

தொடர்ந்து 5 முறை

குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்து வருகிறது பாஜக. ஆறாவது முறையாகஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது பாஜக. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பாஜகவுக்கு லேசான பின்னடைவு ஏற்பட்டிருந்தது. மாஸ் வெற்றி எனச் சொல்ல முடியாத அளவுக்கு பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை கொடுத்திருந்தது.

மும்முனைப் போட்டி

மும்முனைப் போட்டி

இந்நிலையில், இந்த முறை இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு பாஜக கோட்டையாக இருந்து வரும் குஜராத்தில் அக்கட்சியை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என களமிறங்கியுள்ளது காங்கிரஸ். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தை குறிவைத்து களமிறங்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி இந்த முறை குஜராத்திலும் கணிசமான இடங்களைப் பிடிப்பதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டது.

தக்கவைக்க போராடும் பாஜக

தக்கவைக்க போராடும் பாஜக

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது பாஜக. தேர்தலையொட்டி அடிக்கடி குஜராத் சென்று வருகிறார் பிரதமர் மோடி. சமீபத்தில் கூட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தின் மோர்பி நகரில் புதிதாக சீரமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக் கணிப்புகள்

கருத்துக் கணிப்புகள்

முன்னதாக, குஜராத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பாஜகவே பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 135 முதல் 143 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் 36 முதல் 44 தொகுதிகள் வரையும், ஆம்ஆத்மி தொகுதிகள் வரையும் வெல்லக்கூடும் என ஏபிபி சி-வோட்டர் கருத்து கணிப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது.

10 அதிரடி அறிவிப்புகள்

10 அதிரடி அறிவிப்புகள்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத் தேர்தலையொட்டி தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், "குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், 1. 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், 2. 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 3. அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரம் - தேர்தல் வாக்குறுதிகள்

இலவச மின்சாரம் - தேர்தல் வாக்குறுதிகள்

மேலும், 4. 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 5. அரசுத் துறைகளின் பணிகளை ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். 6. வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 7. கொரோனாவால் உயிரிழந்த 3 லட்சம் பேருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தாக்கத்தை ஏற்படுத்துமா?

தாக்கத்தை ஏற்படுத்துமா?

9. 3,000 ஆங்கில வழி அரசுப் பள்ளிகள் அமைக்கப்படும். 10. கூட்டுறவு பால் பண்ணைகளில் பால் ஒரு லிட்டருக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். எரிவாவு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 1000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு தருவோம் எனக் கூறியுள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 10 வாக்குறுதிகள் குஜராத் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+