For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோகன் பகவத் இன்னொரு ஹிட்லர்: திக்விஜய்சிங் கடும் தாக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்துத்துவா இந்தியாவின் அடையாளம் என்று பேசிவரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்னொரு ஹிட்லர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்.

ஒடிஷா மாநிலத்தில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், ஜெர்மன் நாட்டவரை ஜெர்மானியர்கள் என்கிறோம்; இங்கிலாந்து நாட்டவரை இன்கிலாந்துகாரர்கள் என்கிறோம்; அமெரிக்கர்களை அமெரிக்கர்கள் என்கிறோம் ஆனால் இந்துஸ்தானில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று அழைப்பதில்லையே என்று கூறியிருந்தார்.

Congress flay RSS chief Mohan Bhagwat

இதேபோல் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மோகன் பகவத், இந்தியா ஒரு இந்து நாடு; இந்துத்துவாதான் இதன் அடையாளம் என்று கூறியிருந்தார்.

இதைக் கண்டித்து ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளதாவது:

  • அரசியலில் மதத்தைக் கலந்து மக்களை முட்டாளாக்குவது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நிறுத்த வேண்டும்.
  • சனாதன தர்மம் குறித்து நாம் பெருமிதம் கொள்வோம். ஆனால் மற்றவர்களை சகிப்புத்தன்மையுடன் அணுக வேண்டும்.
  • இந்து அல்லது இந்துத்துவா என்ற வார்த்தை நமது வேப உபநிடதங்களிலோ கீதையிலோ மத நூல்களிலோ இருக்கிறதா?
  • இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், புத்தம், ஜைனம் அல்லது வேறு ஒரு மதத்தை பின்பற்றுகிறவரும் இந்துவா? மோகன் பகவத்ஜி இதை விளக்குவாரா?
  • இந்துத்துவா என்பதுதான் மத அடையாளமா? அப்படியானால் சனாதன தர்மத்துக்கும் இந்துத்துவாவுக்குமான உறவு என்ன?
  • நான் இதுநாள் வரையில் ஒரு ஹிட்லர்தான் இருக்கிறார் என நினைத்தேன்..இப்போது இரண்டு ஹிடர்ல்கள் இருப்பதை பார்க்க முடிகிறது! கடவுளே இந்தியாவை காப்பாற்று!!

English summary
Congress general secretary Digvijay Singh on Monday slammed Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat, who had on Sunday said that India is a Hindu nation and Hindutva is its identity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X