காங்கிரஸ் 2வது வேட்பாளர்கள் பட்டியல்: நாராயணசாமி, நக்மா, சசிதரூருக்கு சீட்
டெல்லி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சிட்டிங் எம்.பி நாராயணசாமி மீண்டும் போட்டியிடுகிறார். சசிதரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். நடிகை நக்மாவுக்கு மீரட் தொகுதியில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 7ம்தேதி தொடங்கி மே மாதம் வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பிஸியாக உள்ள கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடத் தொடங்கியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 194 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.

2 வது பட்டியல் வெளியீடு
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர்களின் 2வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 71 பேர் கொண்ட இந்த பட்டியலில் சிட்டிங் எம்.பிக்கள் பலரும், புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளனர்.

சசீதரூருக்கு சீட்
கேரளாவில் 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், பி.சி.சாக்கோ சாலக்குடியிலும், கே.வி.தாமஸ் எர்ணாகுளத்திலும், டீன் குரியகோஸ் இடுக்கியிலும், சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

நக்மாவுக்கு வாய்ப்பு
உத்தரப் பிரதேசம் மாநிலம் பெரசோபாத் தொகுதி எம்.பி.யாக உள்ள நடிகர் ராஜ்பாப்பர் காஜியாபாத் தொகுதியிலும். இம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி லக்னோவிலும், நடிகை நக்மா மீரட்டிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வீரப்பமொய்லி
கர்நாடகாவில் 10 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி சிக்கபல்லாபூரிலும், பி.வி.நாயக் ரெய்சூர் தனி தொகுதியிலும், ஜனார்த்தன பூஜாரி தக்சின் கன்னடா தொகுதியிலும் போட்டியிடுகின்றன

மீண்டும் நாராயணசாமி
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்சாலுக்கு மீண்டும் சீட்
ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் சண்டிகர் தொகுதியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி தொகுதியில் சுபோத் காந்த் சகாயும் போட்டிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேட்பாளர்கள்
அசாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications