பின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது எடியூரப்பா-வீடியோ

  பெங்களூர்: பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

  கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது.

  இதையடுத்து பாஜக தொண்டர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினர். எனினும் இவர்களது மகிழ்ச்சி சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்தது.

  பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

  பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

  நேரம் ஆக ஆக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசனை நடத்தியது.

  காங். - மஜத கூட்டணி

  காங். - மஜத கூட்டணி

  இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்.

  டென்ஷனில் எடியூரப்பா

  டென்ஷனில் எடியூரப்பா

  சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துவிட்டார். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரஸில் தோல்விக்கு காரணம் ஆகும். காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.

  என்ன செய்யப் போகிறது பாஜக

  என்ன செய்யப் போகிறது பாஜக

  கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

  கோவா, மணிப்பூர், மேகலாயா

  கோவா, மணிப்பூர், மேகலாயா

  கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழி அரசியலையே தேர்ந்தெடுத்து ஆட்சி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்நாடகத்தில் அது பலிக்காமல் போய் விடும் போல தெரிகிறது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  With the Congress and the JD (S) forging an alliance to keep the BJP, which emerged as the single largest party in the Karnataka elections, out of power, BS Yeddyurappa on Tuesday said the grand old party is tryinbg to 'grab power' despite being rejected by the people.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற