அசால்ட் சித்தராமையா... இந்த முறையாவது ராகுலுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தேர்தல் எனக்கு அசால்ட்டு - சித்தராமையா ; கலக்கத்தில் ராகுல் காந்தி

  பெங்களூர்: கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் இம்முறையாவது ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது. மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளில் இரு தொகுதிகள் தவிர மற்ற 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

  பெங்களூருவில் உள்ள‌ ஜெயாநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ்வரி தொகுதியில் போலி வாக்காளர் அட்டை சிக்கியதாலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  பாஜக- காங் கடும்போட்டி

  பாஜக- காங் கடும்போட்டி

  இதில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் நேருக்குநேர் மோதின. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

  பாஜக வெற்றி

  பாஜக வெற்றி

  இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் குழப்பும் வகையிலேயே உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலும் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது.

  தக்கவைத்துகொள்ளுமா?

  தக்கவைத்துகொள்ளுமா?

  காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுள்ள நிலையில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என அக்கட்சியினர் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். கையில் உள்ள மாநிலத்தையாவது காங்கிரஸ் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  அசால்ட் பேச்சு

  அசால்ட் பேச்சு

  ஆனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக உள்ள சித்தராமையாவோ கடவுளே வந்து சொன்னாலும் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முறையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் முதல்வராக இருந்து விட்டு போட்டியிடாமல் விட்டால் அவப்பெயர் ஏற்படும் என்பதால் போட்டியிட்டேன் என அசால்ட்டாக கூறி வருகிறார்.

  மகிழ்ச்சி கிடைக்குமா?

  மகிழ்ச்சி கிடைக்குமா?

  இதனால் காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றியை ருசிக்குமா? காங்கிரஸ் தலைவராக உள்ள ராகுல்காந்திக்கு இம்முறையாவது மகிழ்ச்சி கிடைக்குமா என அக்கட்சியினர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்பார்ப்பு பலிக்குமா இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்..

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka assembly election results will be released today. Congress workers expecting massive victory for Rahul.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற