கஜினியை ‘பீட்’ செய்த காங்கிரஸ்.. 19 மாநில தேர்தல்களுக்கு பிறகு முதல்முறை ஆட்சியைப் பிடிக்குது! அடடே!
டெல்லி : 2019ல் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இப்போதுதான் ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த 4 ஆண்டுகளில் 20 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல பிரதேச தேர்தல் வெற்றி மூலம், தொடர் தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுத இருக்கிறது காங்கிரஸ். கஜினி முகமது 17 முறை படையெடுத்தார், 19 மாநில தேர்தல் கடந்து 20வது மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ்.
பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, தற்போது வரை குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலையும் சேர்த்து 20 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
இவற்றில் 10 மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பாஜக கூட்டணி வென்று, பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சி வகிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி இந்த 20ல் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கவில்லை. காங்கிரஸோடு கூட்டணி அமைத்து சில கட்சிகள் ஆட்சியைப் பிடித்திருந்தாலும், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த 4 ஆண்டுகளில் முதல்வராக யாரும் வரவில்லை.

ஏழாவது முறையாக
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகின்றன. குஜராத்தில் ஆளும் பாஜக, சட்டப்பேரவை தேர்தலில் ஏழாவது முறையாக வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள்
குஜராத்தில் இத்தனை காலமாக பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே போட்டி நிலவி வந்த நிலையில், இம்முறை தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இறங்கியதால் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும், குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

பாஜக அறுதிப் பெரும்பான்மை
குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. அதுவும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது ஊடகங்களின் கணிப்பாக இருக்கிறது. மொத்தமுள்ள 182 இடங்களில் காங்கிரஸ் கட்சி 30 - 40 இடங்களையே கைப்பற்றக்கூடும் என்பது கருத்துக்கணிப்புகளின் ஆவரேஜாக இருக்கிறது.

இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 இடங்களுக்கு நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் சற்று முன்பு தொடங்கியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயன்றும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

திருப்பம் நடக்குமா?
இமாச்சல பிரதேசத்தில் தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மீண்டும் பாஜகவுக்கே அமையும் என கூறியிருந்தாலும் அந்த வெற்றி சொற்ப வித்தியாசத்திலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளன. இதனால் இமாச்சல பிரதேசத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு காங்கிரஸுக்கு சாதகமான நிலை அமையுமா என உற்று நோக்கப்பட்டு வருகிறது.

18ல் ஒன்று கூட இல்லை
பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கு முன்பு வரை 18 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி வென்று, பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சி வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி இந்த 18ல் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கவில்லை.

முன்பு 4 ஆக இருந்தது
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைப் பறித்தது ஆம் ஆத்மி கட்சி. 2019 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

கையில் இருந்ததையும்
ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. 2019க்குப் பிறகு நடைபெற்ற ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. கையில் இருந்த பஞ்சாப், புதுச்சேரி மாநிலங்களையும் கடந்த 2 ஆண்டுகளில் இழந்துள்ளது காங்கிரஸ் கட்சி.

கறையை கழுவுமா காங்கிரஸ்?
இதனால், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் இமாச்சல பிரதேசத்தில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாஜக மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற வரலாற்றுக் கறையை காங்கிரஸ் கழுவுமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

காங்கிரஸ் வெற்றிமுகம்
குஜராத்தில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னணியில் இருக்க, இன்னொருபுறம் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜகவுக்கு இடையே கடும் இழுபறி நிலை ஏற்பட்டு வந்தது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 37 இடங்கள், பாஜக 28 இடங்கள் என முன்னிலை வகித்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஆண்டுகளில் முதல்முறை
இமாச்சல பிரதேச வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சி, கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 20 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல்முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. 2019ல் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் முதல் மாநிலமாக இமாச்சல பிரதேசம் இருக்கப் போகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications