பாஜகவில் ஷாக்.. கொரோனா பாதித்த பெண் எம்எல்ஏ காலமானார்.. கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியாத சோகம்
பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி தொற்றுக்கு மரணம் அடைந்தார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி, கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.. இவருக்கு வயது 59.
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்தவர் கிரண் மகேஸ்வரி.. சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 1994ல் நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றி பெற்று கிரண் தலைவரானார்.. அப்போதிருந்து 1999ம் ஆண்டு வரை 5 வருஷம் மேயர் பொறுப்பில் இருந்தவர்.. பாஜகவில் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணியின் தலைவராக கடந்த 2000ல் நியமிக்கப்பட்டார்.

பிறகு கடந்த 2006ல் மகளிர் அணி தேசிய தலைவராகவும், கடந்த 2011ல் அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்... கடந்த 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உயர்ந்தார்.. இதைதவிர அரசின் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தவர்.
கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.. பாஜக தேசிய துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்... இப்படி பலவித உயர் பொறுப்புகளை தன் உழைப்பாலும், திறமையாலும், உயர்ந்தவர்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது... இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வந்தது.. ஆனால், அதில் பலனின்றி காலமானார்.
இவரது மரணம் பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. கொரோனா தொற்றால் மரணம் அடைந்த கிரணுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
-
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications