For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரிபுராவுக்கு சென்ற தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி

Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுராவுக்கு சென்ற தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் தத்தளித்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை அம்மாநிலத்துக்கு தமிழக ஓட்டுநர்கள் இருவர் அழைத்துச் சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் கடந்த 27-ந் தேதியன்று அஸ்ஸாம்- திரிபுரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் பயணித்தவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

Coronavirus: A driver from Chennai to Tripura tests positive

ஒட்டுநர்கள் 2 பேர் உட்பட பயணிகள் 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் தமிழக ஓட்டுநர் மட்டும் திரும்பிவிட்டார்.

இந்நிலையில் திரிபுராவில் இருந்து திரும்பிய தமிழக ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Recommended Video

    அந்த ஒரு ஏசி தான் கொரோனாவை பரப்பும்.. தப்புவது எப்படி? டிப்ஸ்

    அவருடன் வந்த மற்றொரு தமிழக ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. ஆனாலும் சென்னையில் இருந்து திரிபுரா திரும்பிய பயணிகள் அனைவருமே தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    A Chennai ambulance driver who drove with five Tripura residents has tested positive for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X