For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால் கொடுத்த நர்ஸ்.. "நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்".. உருக வைக்கும் சம்பவம்

குழந்தைக்கு தாய்ப்பால் தந்த நர்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பசியால் குழந்தை கதறியதை என்னால் தாங்கவே முடியவில்லை.. அதனால்தான் பால் கொடுத்தேன்" என்று நர்ஸ் ஒருவர் உருக வைத்துள்ளார்.

Recommended Video

    பசியால் அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

    கொல்கத்தாவில் ஆர்.ஜி.மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.

     coronavirus: kolkatta nurse breastfeeds baby in coronaward

    ஆனால், என்ன காரணத்தினாலோ, அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை... வழக்கமாக இப்படி தாய்மார்களுக்கு பிரச்சனை என்றால், அதே ஆஸ்பத்திரியில் இருக்கும் குழந்தை பெற்ற பெண்கள் பால் தருவார்கள்.. ஆனால் இது கொரோனா தொற்று காலம் என்பதால், அப்படியும் குழந்தைகளுக்கு யாராலும் தாய்ப்பால் தர முடிவதில்லை.. வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அப்படி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நேற்றிரவு குழந்தை பசியால் அழுதுள்ளது.. நேரம் ஆக ஆக அந்த குழந்தையின் கதறல் அதிகமாகி கொண்டே போனது.. அப்போது அதே ஆஸ்பத்திரியில் நர்ஸ் உமா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.. அவர் சமீபத்தில்தான் குழந்தை பெற்றிருந்தார்.. நேற்றிரவு நைட் டியூட்டியில் இவர் இருந்தபோது குழந்தையின் அழுகையை பொறுத்து கொள்ள முடியாமல், ஓடிவந்து குழந்தையை வாரியணைத்து தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

    பால் கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென அவரது கணவர் நர்சுக்கு போன் செய்துள்ளார்.. அப்போது, பசியால் குழந்தை அழுததை தன்னால் தாங்கவே முடியவில்லை, அதனால் பால் தந்து கொண்டிருப்பதாக சொன்னார். அதற்கு அவரோ, "குழந்தைக்கு உரிய பாதுகாப்புடன் பால் கொடுக்கும்படி சொல்லி உள்ளார்.

     ஒரே புழுக்கம்.. டூ பீஸில் வந்த நர்ஸ்.. ஸீத்ரூ கவச உடையுடன் பணியாற்றியதால் பரபரப்பு.. ரஷ்யாவில்! ஒரே புழுக்கம்.. டூ பீஸில் வந்த நர்ஸ்.. ஸீத்ரூ கவச உடையுடன் பணியாற்றியதால் பரபரப்பு.. ரஷ்யாவில்!

    எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும், காலையில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் நர்ஸ் அவருக்கு பதிலளித்தார். செவிலியரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.

    மண்ணில் இன்றுவரை உயிர்ப்புடன் இருப்பது உயிர்ப்பால் மட்டும்தான்.. உலகம் முழுவதும் தாய்மையும், தாய்ப்பாலும் ஒரே தரமல்லவோ

    English summary
    coronavirus: kolkatta nurse breastfeeds baby in coronaward
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X