For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபி பிரியரா நீங்கள்? இதைப் படிங்க ப்ளீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காலையில் எழும்போதே சிலர் காபியில்தான் கண் விழிக்கின்றனர். காபி குடிக்காவிட்டால் கை கால் ஓடாது சிலருக்கு. ஏன் இப்படி என்று பலவித ஆராய்ச்சிகள் நடைபெற்று விட்டன.

காபி குடிப்பதால் நன்மைதான் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள் காபி குடிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் தெரிவிக்கின்றன.

உடல் எடையை தடுக்கும்

உடல் எடையை தடுக்கும்

காபியில் காணப்படும் ரசாயனம் ஒன்று உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடல் பருமன் தொடர்பான நோய்களையும் எதிர்ப்பதாக புதிய ஆய்வு ஒன்று கோரியுள்ளது.

ரசாயன அமிலம்

ரசாயன அமிலம்

காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் இன்சுலின் தடுப்பைக் குறைப்பதோடு, லிவர்களில் கொழுப்பு சேர்வதையும் தடுப்பதாக எலிகளிடத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. குளோரோஜெனிக் அமிலம் அழற்சியையும் குறைப்பதாக இந்த ஆய்வின் தலைவர் யாங்ஜி மா என்பவர் கூறியுள்ளார்.

எலிகளில் ஆய்வு

எலிகளில் ஆய்வு

இந்த ஆய்வாளர்கள் எலிகள் சிலவற்றிற்கு உயர்-கொழுப்பு உணவுகளை 15 வாரங்களுக்கு கொடுத்ததுடன், குளோரோஜெனிக் அமிலத்தையும் வாரம் இருமுறை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர்.

அப்போது குளோரோஜெனிக் அமிலம் உடல் எடை கூடுவதை தடுத்ததுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை சகஜநிலையில் வைத்திருந்ததும், கண்டறிந்தனர்.

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரல் பாதுகாப்பு

காபியில் உள்ள காபின் என்ற வேதிப் பொருள் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துவதுடன், கல்லீரலில் அதிகப்படியாக கொழுப்பு சேர்வதை தடுக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சாதாரணமாக மனிதர்கள் உட்கொள்ளும் காப்பி மற்றும் பழங்கள், காய்கறிகள் அளவைக் காட்டிலும் அதிக அளவிலான குளோரோஜெனிக் அமிலம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டது.

அதிகம் குடிக்கவேண்டாம்

அதிகம் குடிக்கவேண்டாம்

இதற்காக மக்கள் அதிக அளவில் காப்பி குடிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துவதாக நினைத்து விடக்கூடாது. ஆனால், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுபவர்களிடத்தில் குளோரோஜெனிக் அமிலம் மூலம் உடல் எடை, மற்றும் பருமன் பிரச்சினைகளுக்கு பயனுள்ள சிகிச்சையை வளர்த்தெடுக்க முடியும் என்றே கூறுகிறோம்" என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பார்மசூட்டிக்கல் ரிசர்ச் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

கர்ப்பிணிகள் குடிக்கலாமா?

கர்ப்பிணிகள் குடிக்கலாமா?

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைகு 2-கப் காபி குடிப்பது குழந்தைக்கு லுகேமியா (இரத்த புற்றுநோய்) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று வேறு ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் அதிகமாக 60 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுகேமியா பாதிப்பு

லுகேமியா பாதிப்பு

ஏற்கனவே நடத்தப்பட்ட 20 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணியாக இருக்கும்போது ஒரு பெண் 2 காபி குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். 20 சதவீதம் லுகேமியா பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 2 கப்

ஒரு நாளைக்கு 2 கப்

கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒருவர் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேல் காபி குடித்தால் குழந்தை 60 சதவீத லுகேமியா பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கர்ப்ப காலத்தில் 4 கப்பிற்கு மேல் காபி குடித்தால் குழந்தைகளுக்கான பாதிப்பு 72 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 500 குழந்தைகள் லுகேமியாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் இது மிகவும் பொதுவான குழந்தை பருவத்தில் உள்ள புற்றுநோய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீமோ தெரபி

கீமோ தெரபி

அதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து கீமோதெரபி மூலம் சிகிச்சை அளித்தால் 80 சதவீதம் குணப்படுத்திவிடலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து கீமோதெரபி மூலம் சிகிச்சை அளித்தால் 80 சதவீதம் குணப்படுத்திவிடலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.ஏ மாற்றம்

டி.என்.ஏ மாற்றம்

அமெரிக்காவில் உள்ள மகப்பேறியல் நாளிதழில் இந்த ஆய்வு குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நடத்திய கல்வியாளர்கள் மற்றும் அரசு; கர்ப்பிணி பெண்கள் காபி குடிப்பதை குறித்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை முற்றும் தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் காபி நச்சு கரு செல்களில் டி.என்.ஏ. மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நினைக்கின்றனர்.

English summary
Coffee consumption may help offset some of obesity’s negative side effects, according to a new study published in the journal Pharmaceutical Research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X