For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1636 பலாத்காரங்கள்… 517 கொலைகள் - குற்றங்களில் தலைநகரான டெல்லி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தலைநகராக உள்ள டெல்லி குற்றங்களின் தலைநகரமாகவும் மாறி வருகிறது.கடந்த ஆண்டுமட்டும் 1636 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அதோடு 517 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் தேசிய குற்றப்பதிவுகள் ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 706 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த (2013) ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்கை விட கூடுதலாக அதிகரித்து, 1636 ஆக உயர்ந்துள்ளது.

2013ம் ஆண்டில் 517 கொலைகள், 532 கொலை முயற்சிகள், 144 வரதட்சணை கொடுமை மரணங்கள், 3609 ஆள் கடத்தல் ஆகியவை டெல்லியில் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களின் மீதான வன்முறை

பெண்களின் மீதான வன்முறை

2013ம் ஆண்டு பெண்களின் மீதான வன்முறை சம்பவங்கள் மட்டும் 3,609 நடைபெற்றுள்ளன. அதில் 144 வரதட்சணைக் கொலைகள் ஆகும். கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 3033 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டில் பெண்களின் மீதான வன்முறை வழக்குகள் 2,160 பதிவாகியுள்ளன. அதில் 134 வரதட்சணை கொலைகள், 1985 வழக்குகள் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள் மீதான வன்முறை

குழந்தைகள் மீதான வன்முறை

7,199 வழக்குகள் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. இதுவே 2012ம் ஆண்டில் 4,462 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

பலாத்கார சம்பவங்கள்

பலாத்கார சம்பவங்கள்

தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு 1636 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுவே 2012ம் ஆண்டு 706 பலாத்கார வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

517 கொலைகள்

517 கொலைகள்

கடந்த ஆண்டு 517 கொலைகள் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

திருட்டு, கொள்ளைகள்

திருட்டு, கொள்ளைகள்

9,710 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2012ம் ஆண்டினை விட அதிகமாகும். 2012ம் ஆண்டில் 8,996 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

குற்றங்களின் தலைநகரம்

குற்றங்களின் தலைநகரம்

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்துவருகிறது.

English summary
Crime in Delhi saw an upward trend when it comes to incidents like rape, murder and abduction with over 1,600 rape cases reported in 2013, more than double the previous year. According to a report of National Crime Records Bureau, 1,636 cases of rape were register in the national capital last year, while 706 cases of rape in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X