தங்க மாஸ்க் அணிந்து இருக்கும் தங்க மகன்...கை கழுத்தில் எல்லாம் தங்கம்தான்...!!
கட்டாக்: சாதாரண மாஸ்க் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வரும்போது, சிலர் தங்க மாஸ்க்குகளை அணிந்து கலக்கி வருகின்றனர். புனே வர்த்தகரை அடுத்து தற்போது கட்டாக் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ரூ. 3,5 லட்சம் செலவில் தங்கத்தினாலான மாஸ்க் வாங்கி அணிந்து கொண்டுள்ளார்.
இவருக்கு முன்னதாக புனேவைச் சேர்ந்த ஒருவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து இருந்தார். தங்க மாஸ்க் எந்தளவிற்கு கொரோனா வைரஸ் தொற்று வராமல் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்து தெரியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் பதித்த மற்றும் தங்க, வெள்ளி மாஸ்க்குகளை வாங்கி அணிந்து வந்தனர். அங்கு மணமகன், மணமகள்கள் வைரக் கற்கள் பதித்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான மாஸ்க்குகளை வாங்கி அணிந்து வந்தனர். என் 95 மாஸ்க்கில் தங்க வேலைப்பாட்டில் இந்த மாஸ்க் தயாரிக்கப்படுகிறது. மேலும், வைரங்கள் அந்த மாஸ்க் மீது பாதிக்கப்படுகிறது.
தற்போது கட்டாக் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் அலோக் மொஹந்தி ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து இருக்கிறார். தன்னுடைய பகுதியில் இருக்கும் தங்க நகைக் கடையை அணுகி தனக்கும் தங்க மாஸ்க் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர்களும், என். 95 மாஸ்கில் தங்க வலை போன்று செய்து பதித்துள்ளனர். இந்த மாஸ்கை தயாரிக்க 22 நாட்கள் பிடித்துள்ளது. 90 - 100 கிராம் வரை தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் தங்க மாஸ்க் மட்டுமில்லை, உடல் முழுக்க தங்கத்தால் ஜொலிக்கிறார் இவரை தங்க மேன் என்றும் அழைக்கலாம்.
இதுகுறித்து மொஹந்தி கூறுகையில், ''கடந்த 30 - 40 ஆண்டுகளாக நான் தங்கம் அணிந்து வருகிறேன். எனக்கு தங்கம் தான் வீக்னஸ். மக்கள் தங்க மாஸ்க் அணிந்து இருப்பதைப் பார்த்து எனக்கும் அணிய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே, தங்க நகைக் கடையை அணுகி செய்து கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications