For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

75 வயது மாமனார்.. கொரோனா பாசிட்டிவ்.. மருமகள் செய்த காரியத்தை பாருங்க..மலைக்க வைத்த போட்டோ!

மாமனாரை தோளில் சுமந்து சென்றார் மருமகள்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிய மாமியாரின் குரோதச் செயலை கேள்விப்பட்டோம்.. ஆனால், மாமனாருக்கு கொரோன வந்ததால், மருமகள் செய்த காரியம், அனைவரையும் மலைக்க வைத்து வருகிறது.

ஒடிசாவை சேர்ந்த சூரஜ்.. வெளியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி நிகாரிகா.. கணவன் வெளியூரில் உள்ளதால், கிராமத்தில் உள்ள சூரஜ்ஜின் அப்பாவுடன், நிகாரிகா வசித்து வருகிறார்..

Daughter in law carrys father in law to Hospital, photo goes viral on socials

சூரஜ்ஜின் அப்பாவுக்கு 75 வயதாகிறது.. பெயர் துலேஸ்வர் தாஸ்.. மாமனாரும், மருமகளும் 2 பேரும்தான் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு துலேஸ்வருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் டெஸ்ட் எடுக்கப்பட்டதில், அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.. இதை கேட்டதும் நிகாரிகா கடுமையான அதிர்ச்சி அடைந்தார்..

 உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது.. இந்தியாவில் ஒரே நாளில் 3,382 பேர் பலி உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது.. இந்தியாவில் ஒரே நாளில் 3,382 பேர் பலி

ஆம்புலன்ஸ்களுக்கும், வேறு வண்டிகளுக்கும் காத்திருக்காமல், வேறு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், வயதான மாமனாரை முதுகில் தூக்கி வைத்து கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி சென்றார். சாலையில், இதை பார்த்த பலரும் வியப்புற்றனர்.. அப்போது எடுக்கப்பட்ட போட்டோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. இதையடுத்து நிகாரிகாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..

ஆனால், துக்கமான ஒரு செய்தி என்னவென்றால், பதட்டத்திலும், பாசத்திலும் மாமனாரை முதுகில் சுமந்து கொண்டு போனதில், நிகாரிகாவிற்கும் கொரோனா பாஸிட்டிவ் என தெரியவந்துள்ளது... இப்போது மாமனாரும், மருமகளும் ஒரே ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

English summary
Daughter in law carrys father in law to Hospital, photo goes viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X