For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேஜ்ரிவால் வீட்டு கரண்ட் பில் ரூ91 ஆயிரமாம்... சீறுகிறது பா.ஜ.க.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசுக் குடியிருப்பின் 2 மாத மின்சாரக் கட்டணம் ரூ.91 ஆயிரம் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. ஆனால் இத்தகவலை டெல்லி அரசு மறுத்துள்ளது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி சிவில் லைன்ஸ், ஃபிளாக் ஸ்டார் ரோட்டில் 6-ஆம் எண்ணுள்ள வீடு, அரசுக் குடியிருப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Delhi CM Arvind Kejriwal's personal power bill Rs 91,000?

இந்த இல்லத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்தக் குடியிருப்புக்கான மின் கட்டணம் குறித்து டெல்லியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலரும் வழக்கறிஞருமான விவேக் கர்க் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்.

இவருக்கு டெல்லி அரசு அளித்துள்ள தகவலில், கேஜ்ரிவாலின் சிவில் லைன்ஸ் குடியிருப்பின் கடந்த ஏப்ரல்- மே ஆகிய இரு மாதங்களுக்கான மின் கட்டணம் ரூ.91 ஆயிரம் என அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

கேஜ்ரிவாலின் குடியிருப்புக்கான மின் கட்டணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீண் கபூர் கூறுகையில், முதல்வர் கேஜ்ரிவாலின் சிவில் லைன்ஸ் குடியிருப்பில் இரு மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு மீட்டர்களின் சமீபத்திய மின் கட்டணத் தொகை ரூ.55 ஆயிரம் மற்றும் ரூ.48 ஆயிரம் ஆகும். அதாவது ரூ.1 லட்சத்து 3 ஆயிரமாகும். இதுபோன்று மற்ற ஆம் ஆத்மி அமைச்சர்களின் குடியிருப்புகளுக்கான மின்சாரக் கட்டணமும் அதிகமாகவே இருக்கும். இது பற்றி விவரங்கள் கோரப்படும்.

இவ்வளவு அதிகமான மின் கட்டணத் தொகையின் மூலம் பொதுப் பணத்தை தனது வசதிகளுக்காக முதல்வர் கேஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இரு முகங்கள் உள்ளன. ஒரு முகம் ஏழைகளுக்கானது போல காட்சி தரும். மற்றொரு முகம் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பதாகும் என்றார்.

ஆனால் கேஜ்ரிவாலின் வீட்டுக்காக மட்டுமே மின் கட்டணம் ரூ.91 ஆயிரம் என்பதை டெல்லி அரசு மறுத்துள்ளது.

English summary
The AAP government on Tuesday rebutted criticism by the BJP on the issue of Rs 91,000 power bill at Chief Minister Arvind Kejriwal's official residence, saying it included electricity charges for a camp office and various other facilities installed for visitors at the complex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X